நாட்டினது பொருளாதாரத்திற்காக தோட்டத்தொழிலாளர்கள் வழங்கும் பங்களிப்பிற்கு உரிய கௌரவத்தை வழங்கியது எமது அரசாகும் -மத்தும பண்டார

கஹட்டோவிட்ட ரிஹ்மி -

"இலங்கையின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் பாரிய பங்களிப்பினை வழங்குபவர்களாக தோட்டத் தொழில் புரியும் சகோதர மக்களைக் குறிப்பிட முடியும். இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு இவ்வாறு பாரிய பங்காற்றும் எமது தோட்டத் தொழில்புரியும் மக்களுக்கு, அதற்காக வழங்கும் சலுகைகளைப் பார்க்கும் போது எங்கள் மீது பெரிய விமர்சனம் இருக்கிறது. பல நூற்றாண்டு காலமாக நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்த இவர்களை, பிந்திய காலத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் தமது சந்தர்ப்பவாத நலன்களுக்காக பயன்படுத்தினர். 

அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய அடிப்படை உரிமைகளுக்காக அவர்களது வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற கட்சிகள், அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆயினும் ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் என்ற வகையில் எங்களுக்கு மகிழ்ச்சியுடன் சொல்லலாம், எங்களது அரசைப் போன்று எந்த அரசும் இந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிய கௌரவம் போன்று சமூக மதிப்பையும் வழங்கியது எமது அரசே ஆகும்" என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். மொனராகலை, குமாரவத்தையில் உள்ள உள்ள தோட்டத் தொழிலாளர்களுடன் சென்ற 19 ஆந் திகதி நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "அரசாங்கம் என்ற வகையில் நாம் மொனராகலை மாவட்டத்திற்கு பாரிய அபிவிருத்தியைக் கொண்டு வருவதற்கான திட்டத்தை அமைத்துள்ளோம். அதில் தோட்டத்தொழிலாளர்களுக்கும் நன்மைகளை வழங்க நாம் மறக்கவில்லை. மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களைப் போன்று ஊவா - மொனராகலையிலும் பாரிய தொகையினர் தோட்டத் தொழிலை மேற்கொள்கின்றனர். 

மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு உங்கள் மீது பாரிய பொறுப்புள்ளது. விசேடமாக இவர்களது வதிவிடப் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் பாரிய திட்டத்தின் ஆரம்ப கட்டம் முடிவடைந்துள்ளது. இதன் கீழ் பிபிலை வதுயாய, குமாரவத்த மரகல பிரிவு, குமாரவத்த நக்கல பிரிவு, வைகும்புரவத்த, தன்னகும்புரவத்த போன்ற தோட்டத்தொழிலாளர்கள் செறிவாக வசிக்கும் பிரதேசங்களில் லயன்களை புனரமைப்பதற்கு 30 இலட்ச ரூபா நிதி ஒதுக்கப்பட்டு உரிய வேலைகள் தொடங்குவதற்குத் தயார் நிலையில் உள்ளது. இன்னும் இந்த மக்கள் இருப்பது லயன்களில் என்பது சந்தோசமான செய்தி அல்ல. 

அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான ஒரு கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான நிகழ்ச்சித்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. எமது மாவட்டத்திலுள்ள தோட்டத்தொழிலாளர்களுக்கு சொந்தமான வீடு கிடைப்பதற்கு நாம் திட்டம் தயாரித்துள்ளோம். இதற்கான இடத்தை தெரிவு செய்வதற்காக தோட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அது போன்று தோட்டப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்து இவர்களது கல்வியறிவு மட்டத்தை அதிகரிப்பதற்காக பாரிய திட்டம் தயாரிக்கப்படுகிறது.

இவையெல்லாம் நாட்டின் ஏனைய மக்களைப் போன்று தோட்டத் தொழிலாளர்களுக்கும் உரிமைகள் கிடைப்பதற்காகும். இவ்வாறு நாட்டின் சாதாரண அரசியல் கலாசாரத்திலிருந்து பிரிந்து முழு நாட்டிற்கும் ஒரே விதத்தில் தீர்மானம் எடுப்பதே பிரதமர் உள்ளிட்ட எமது அரசின் கொள்கையாகும். அதன் மூலம் மொனராகலை மாவட்ட தோட்டத்தொழிலாளர்களுக்கு பணிபுரிவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி வருகிறோம்" என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -