கடமையும் கவனயீனமும்..

பொதுமக்களுக்கு சேவை வழங்கும் பொறுப்பும் கடமையும் உள்ள அரச அதிகாரிகள் அடிக்கடி பணி பகிஷ்கரிப்பு செய்வது நியாயமாகுமா?

இவர்களின் பனி பகிஷ்கரிப்பினால் அதிகமாக பாதிக்கப்படுவது ஏழை பொதுமக்களே.. இவர்களுக்கு தெறியாதா நமது வைத்திய சேவை மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்டது என்று...

நான் இலங்கையில் வாக்குரிமை பெற்ற குடிமகன் என்ற வகையில் இலங்கை அரசாங்கத்திற்கும் உயர் அதிகாரிகளுக்கும் எனது வேண்டுகோள்..

அரச ஊழியர்களின் பணி சேவை மகத்தானது அவர்களின் கடமை பொறுப்பு வாய்ந்தது பொதுமக்களின் நலனை கவனத்தில் கொண்டது..

இவ்வாறு இருக்கும் நிலையில் கடமை தவறும் அதிகாரிகள், பணி பகிஷ்கரிப்பு செய்வோர், அரச உடமைகளை சொந்த தேவைக்கு பயன்படுத்தல், பணியில் கவனம் இன்மை, வேலை நேரத்தில் கடமை தவறுதல், பொது மக்கள் அணுகுமுறை போன்ற தவறுகள் செய்யும் அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்து எத்தனையோ வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கலாம்.

ஒவ்வொரு அரச நிறுவனங்கள் அலுவலகங்களிலும் பொதுமக்களின் முறைப்பாட்டு பெட்டி வைக்கப்படல் வேண்டும். அதில் இடப்படும் முறைப்பாடுகளுக்கு உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்..

இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக அரச பணிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை, மதிப்பு ஏற்படும்..

ஜுனைட்.எம்.பஹ்த்
ஊடகவியலாளர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -