எஸ்.அஷ்ரப்கான்-
எஸ்.அஷ்ரப்கான்)
மல்வானை உளஹிட்டிவள கியூடஸ் பாலர் பாடசாலை மாணவர்களின் வரைதல் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா அண்மையில் உளஹிட்டிவள அல்-மஹ்மூத் வித்தியாலயத்தில் கியூடஸ் பாலர் பாடசாலையின் தலைமை அதிபர் எப். பஸ்லியா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அல்-மஹ்மூத் வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம். உஸ்மான் அவர்களும் கௌரவ அதிதியாக முன்னாள் பியகம பிரதேச சபை உறுப்பினர் எம்.இர்பான் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு கியூடஸ் பாலர் பாடசாலை மாணவர்கள் நேரடியாக சபையோர் முன்னிலையில் வரைதலில் ஈடுபட்டு தங்களின் வரைதல் திறன்களை வெளிப்படுத்தினர்.
இதன்போது நிகழ்வில் பங்குகொண்ட மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவுச் சின்னம், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இங்கு 5 வயது மாணவன் அல்-குர்ஆனை ஓதிக்காண்பித்து சபையோரின் பாராட்டுக்களைப் பெற்றமை விசேட அம்சமாகும்.