உறவுகளோடு சேர்ந்து அழுவது கூட உறுதி இல்லாத தேசம்..
ஆட்சியாளும் அரக்கனுக்கு அமைதிக்கான நோபல் பரிசில்கள்
அப்பாவி மக்களுக்கோ நோவினை தரும் மரணங்கள்..
மிருகமேனும் மென்று உண்ணும்..
என் தேசத்து மனித மிருகங்கள் கொன்று உண்ணும்..
என்ன தவறு செய்தோம்.
அடி நெஞ்சில் அல்லாஹ்வை சுமந்தோம்..
இஸ்லாத்தை இதயத்தில் சுமந்தோம்..
கலிமாவை நாவில் சுமந்தோம்..
அதற்காக கொன்று குவிக்கிறார்கள்..
எங்கள் அடையாளத்தை அழிக்கட்டும்..
எங்கள் உயிரை குடிகட்டும்..
உடலை எரித்து குளிர்காயட்டும்..
இஸ்லாத்தை துறக்கமாட்டோம்..
ஈமானை இழக்கமாட்டோம்..
நாங்களும் ஷஹிதுகளான
சுவனத்து பூக்கள்..
காத்தவூர்க்கவி
ஜுனைட்.எம்.பஹ்த்.
காத்தான்குடி.