ஒரு மிஸ்கோல்
உன்னை மிஸ்கீன் ஆக்கலாம்
ஒரு மெஸேஜ்
உன் மூளையை மஸாஜ் செய்யலாம்
ஒரு போஸ்ட்
உன்னை வேஸ்ட் ஆக்கலாம்
ஒரு ஷெயார்
உன் எதிரிகளைத் தயார் ஆக்கலாம்
ஒரு லைக்
உன் மானத்தைக் க'லைக்'கலாம்
ஒரு ஷெல்பி
உன்னை செல்லாக் காசாக்கி விடலாம்
ஒரு ஓடியோ
உன்னை ஓடிப் போகச் செய்து விடலாம்
ஒரு வீடியோ
உன்னை விடிய விடிய வேதனை செய்யலாம்
ஒரு emoji
உன் இமேஜை டெமேஜ் ஆக்கி விடலாம்
ஒரு அப்
உன் அப்பனையும் அப்பால் தள்ளி விடலாம்
ஒரு மெப்
உன் வாழ்க்கையை மொப் பண்ணி விடலாம்
ஒரு மெய்ல்
உன்னை ஸ்பொய்ல் ஆக்கி விடலாம்
ஒரு றிக்வெஸ்ட்
உன் முடிவை குறிக்க வெச்சுடலாம்
ஒரு ஸ்மார்ட் போன்
ஒவ்வொரு வாழ்க்கையிலும்
ஊடுருவித் தாக்கலாம்