நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
சுகாதார பரிசோதகர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையினால் மலையத்திலுள்ள சகல இறைச்சி விற்பனை நிலையங்களும் முடப்பட்டுள்ளதுடன் சுகாதார பரிசோதகர்களின் சகல நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. யாழ் நகர சபையின் கடமையாற்றிய சுகாதார பரிசோதகர்கள் 3 பேரை வடமாகாண சுகாதார அமைச்சினால் அரசியல் ரீதியில் இடமாற்றம் செய்யப்படமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 04.09.2017 காலை முதல் நாடளவிய ரீதியில் சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையகத்தின் சகல சுகாதார பரிசோதகர்களும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமையினால் இறைச்சி விற்பனை நிலையங்கள் மூட்டப்படு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.