ணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன,
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சின் செயலாளர் யூ,எல் ஏ அஸீஸ் தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 66 பயனாளிகளுக்கு இதன் போது காசோலைகள் கிழக்கு முதலமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டன,
முதலமைச்சி்ன் கீழுள்ள வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணலை ஆகிய மூன்று மாவட்டங்களில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி, உறுப்பினர்களான கே.எம்.ரஷாக் ஜவாத், ஐ.எல்.மாஹீர், ஏ.எல்.தவம், மெத்தானந்த சில்வா,மஞ்சுள பெர்ணாண்டோ,அருண சிறிசேன ஆகியோருடன் வீடமைப்பு அதிகார சபை தவிசாளர் கே.எல்.ஹமீட் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.