தலைவர் அஷ்ரப் காட்டிய வழியில் சமூக உரிமைக்கான போராட்டம் தொடரும்- ஹிஸ்புல்லாஹ் சூளுரை

ஆர்.ஹஸன்-

ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹ{ம் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மு.காவில் இன்று இல்லாவிட்டாலும் அக்கட்சி எந்த நோக்கத்துக்காக – கொள்கைக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இலட்சியத்தை அடைந்து கொள்வதற்காக சமூகம் சார்ந்த உரிமைப் போராட்டங்களை தான் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் நடைபெறும் “மக்களுடன் மண்ணின் மைந்தன்” நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதன்போது முகநூல் வாயிலாக ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தான். அதன் கொள்கையின் அடிப்படையிலேயே எனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றேன். ஆனால், அந்தக் கட்சியோடு இணைந்து அதன் தலைமைத்துவத்துடன் இணைந்து செயலாற்றுவது என்பது என்னைப் பொறுத்தவரை கஷ்டமான காரியம்.

 அதனால், அதிலிருந்து வெளியேறி அதன் கொள்கையை வேறு விதத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றேன். இருந்த போதிலும், எனக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துக்கும் எந்த விதமான பிரச்சினைகளும் கிடையாது. நாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள் நெருக்கமாகவே இருக்கின்றோம். முஸ்லிம் சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்களில் இணைந்து நல்ல நோக்கத்துடன் செயற்படுகின்றோம். 

நான் வேறு கட்சியில் இருந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{டைய கொள்கைகளைத் தான் பின்பற்றுகின்றேன். தலைவர் அஷ்ரப் அவர்களது பாசறையில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த நோக்கத்துக்காக – கொள்கைக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இலட்சியத்தை அடைந்து கொள்வதற்கும், அந்த கொள்கையை வழிநடத்துவதற்கும், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சார்ந்த விடயங்களை எவ்வாறு கையாள வேண்டும் என தலைவர் வழிகாட்டியுள்ளாரோ அதன் அடிப்படையில் நாங்கள் இன்று வரை செயலாற்றி வருகின்றோம். அதில் எந்தவித மாற்றங்களும் கிடையாது. 

தலைவர் அஷ்ரப் வழிகாட்டிய கொள்கையை நாங்கள் முழுமையாக பின்பற்றி வருகின்றோம். ‘வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும்’ என தலைவர் அஷ்ரப் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் நாங்கள் இன்று ‘வடக்கும் கிழக்கும் இணைவதற்கு இடமளிக்க மாட்டோம்’ என்ற விடயத்தில் உறுதியாக இருக்கின்றோம். 

‘கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்’ என தலைவர் அஷ்ரப் வலியுறுத்தினார். அதற்கான சூழ்நிலைகளை நாங்கள் இன்று உருவாக்கி வருகின்றோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களது உரிமைகள் தொடர்பில் அன்று தலைவர் அஷ்ரப் பேசினார். இன்று நாங்கள் எமது உரிமைகளுக்காக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் போராடிக் கொண்டிருக்கின்றோம். 

ஆகவே, தலைவர் அஷ்ரபின் கொள்கைகளை நிலைநாட்டுவதற்காகத் தான் நாங்கள் இன்று பணியாற்றிக்; கொண்டிருக்கின்றோம். – என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -