நேற்று தங்கல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது ,
எங்கள் ஆட்சி காலத்தில் எது நடந்தாலும் அதனை விமர்சிக்கவென்றே சிலர் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.இவற்றைய நம்பிய ஒரு தரப்பினர் கடந்த தேர்தலில் எங்களை நிராகரித்துமிருந்தார்கள்.இப்போதுஇவ் ஆட்சியில் இடம்பெறும் பல விடயங்களை எங்கள் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற விடயங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் எங்கள் ஆட்சி எந்தளவு சிறந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
எங்கள் ஆட்சிக் காலத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பின் போது 1 Km வீதிக்கு 12 மில்லியன் தேவைப்பட்டது.எமது அதிவெக நெடுஞ்சாலைகளையே அவசியமற்றதென விமர்சித்தவர்கள் இன்று 1km வீதிக்கு 26 மில்லியன் செலவில் வீதி அமைத்துக்கொண்டிருக்கின்றனர்.இது எமது ஆட்சியில் தேவைப்பட்ட பணத்தை விட இரட்டிப்பு மடங்கிலும் அதிகமாகும்.
இதன் போதான விலைமனுக்கோரல் கூட நியாயமான முறையில் இடம்பெறவில்லை. அதிலும் முறைகேடான முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான விடயங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையிலான பொருளாதார குழு கையாளும்.இக் குழுவானது இந் நெடுஞ்சாலை அமைத்தலுக்கான அனுமதியை விலைமனுக்கோரலுக்கு முன்பே வழங்கிவிட்டது. இப்படித்தான் நல்லாட்சியின் நிலை சென்றுகொண்டிருக்கின்றது.
எம்மை ஊழல் வாதிகள் என விமர்சித்தவர்கள், இப்போது தங்கள் முகங்களை எங்கே வைத்துக்கொள்ளப்போகிறார்கள்.இவ்வாறானவற்றை பார்க்கும் போது நாங்கள் எந்தளவு சிறப்பாக ஆட்சி செய்துள்ளோம் என நாங்கள் எங்களையே மட்டிட்டுக்கொள்ள முடிகிறது.
எங்களை ஊழல் வாதிகளென கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஊழலில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர். இதன் பின்னரும் இவர்களை இலங்கை மக்கள் நம்பப்போவதில்லை. தேர்தலொன்று இடம்பெற்றால் இவர்களுக்கான பாடம் புகட்டப்படும் என்பதில் எதுவித மாற்றமுமில்லை என அவர் குறிப்பிட்டார்.