அந்த வகையில் ரோகிங்கிய மக்கள் தொடர்பில் முக நூலில் பதிவிட்டுள்ள அவர் “தாங்கள் ஒன்றிணைந்து அவர்களைகொன்று விடுவோம் “ என கூறியுள்ளார்.
ரோஹிங்கிய அகதிகள் தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பது இவ்வாட்சியாளர்களின் கடமையாகும். இலங்கை அரசானது சர்வதேச ரீதியிலான பல கொள்கைகளை கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். அப்படி இருக்கையில் “ அவர்களை கொல்வோம் “ என எச்சரிப்பது தீவிர வாதத்துடன் தொடர்புடைய வார்த்தைபிரயோகங்களாகும். இலங்கை அரசு எப்படியான முடிவை எடுத்தாலும் அது வேறு விடயம். இப்படியான வார்த்தைபிரயோகங்களை பாவிக்க எத்தனை துணிவு வேண்டும்?
இவர் நீதி மன்றத்தால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒருவர். விஜயதாஸ ராஜபக்ஸவை அமைச்சிலிருந்துநீக்கியதால், ஞானசார தேரர் பயந்து ஜப்பான் சென்றுவிட்டதாக கூறினார்கள். சாதாரண டான் பிரசாத்தை அடக்கமுடியாத அரசு, ஞானசார தேரரையா அடக்கப் போகிறது? இதற்கிடையில் இவர் இனவாதத்தை தூண்டும்வகையிலான கருத்துக்களை வெளியிடக் கூடாதென நீதி மன்றத்தால் எச்சரிக்கப்பட்டவர்.அண்மையில் முஸ்லிம்பெண் சிங்கள பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகளை வழங்குகிறார் போன்ற போலிக் குற்றச் சாட்டுக்களை கூடமுன் வைத்திருந்தார்.
இவ்வரசு டான் பிரசாத் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீதியை நிலை நாட்ட வந்த நீதி அமைச்சராவதுநீதியை நிலை நாட்டுவாரா? எத்தனை முறை எப்படி கேட்டாலும், இவ்வரசு டான் பிரசாத் போன்றவர்களின்விடயத்தில் நீதியை நிலை நாட்டப் போவதில்லை.