எஸ்.அஷ்ரப்கான்-
அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸமான் முஹம்மட் ஸாஜீதின் முயற்சியினால் சாய்ந்தமருதுகமு/ சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ். கலவன் பாடசாலைக்கு நிலத்துக்கு வர்ணக் கற்கள் அமைத்து பூந்தோட்டம்ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு குறித்த பாடசாலையில் சனிக்கிழமை (23.09.2017) அம்பாறைமாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸமான் முஹம்மட் ஸாஜீத் தலைமையில் நடைபெற்றது.
தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள்அமைச்சு இணைந்து கிராமத்துக்கு ஒரு வேலை திட்டம் (Youth with talent 2017) 150,000 ஆயிரம் ரூபாய்கள்பெறுமதியான வேலை திட்டத்தினை சாய்ந்தமருது ஜீனியஸ்7 இளைஞர் கழகத்துடன் இணைந்து இச்செயற்திட்டம்நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஹனீபா, மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி லத்தீப் , சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவைகள் அதிகாரி அசீம், ஜீனியஸ்7 இளைஞர் கழகத்தின் செயலாளர்எம்.எம்.எம் றிப்னாஸ் மற்றும் பாடசாலை அதிபர் நாசர் , பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் , கிராம சேவை அதிகாரிபாரூக்,பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் கழக அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஸமான் முஹம்மட் ஸாஜீத் அவர்களின் அர்ப்பணிப்புமிக்கசேவைகள் குறித்து அதிதிகள் பாராட்டு தெரிவித்ததுடன் அவரது எதிர்கால வேலைத் திட்டங்களுக்கு முழுமையானஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டனர்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஹுதா பள்ளிவாசல் பேஷ் இமாம் சியாம் மௌலவியினால் துஆப் பிரார்த்தனைமேற்கொள்ளப்பட்டது.