மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்திருத்தம் -கலப்புத் தேர்தலில் ஒற்றை வாக்கு முறை ஆபத்தானது

லப்புத் தேர்தலில் ஒற்றை வாக்கு முறை ஆபத்தானது
மேற்படி சட்டத் திருத்தம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் அதில் 60:40 என்ற கலப்புத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் அதற்கு முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனது " அரசியலமைப்புச்சட்ட மாற்றம்- பாகம் 14ல் குறிப்பிட்டதுபோல், இதுதான் குழுநிலை விவாதத்தில் பாராளுமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தையும் மீறி திருத்தங்களைக் அங்கீகரிக்கின்ற ஒரு நிலையாகும். பின்னர் அதனை நீதிமன்றத்திலும் கேள்விக்குட்படுத்த முடியாது.

இந்த 60:40 என்பது மாகாண மட்டத்திலா அல்லது மாவட்ட மட்டத்திலா? என்று தெரியவில்லை. பிரதமர் மாகாணசபை மற்றும் பாராளுமன்றத்திற்கு நியூசிலாந்து முறையை அறிமுகப் படுத்தப் போவதாக கூறியிருந்தார். இதே கருத்தை பொதுத்தேர்தலுக்குமுன் அன்றைய உத்தேச 20 வது திருத்தத்தைக் கலந்துரையாடியபோதும் தெரிவித்திருந்தார். நியூசிலாந்து முறை என்று சொல்லிக்கொண்டு அதற்கு முற்றிலும் மாற்றமான முறையைத்தான் அவர் பிரேரித்தார், அதுதான் நியூசிலாந்தின் இரட்டை வாக்கு முறைக்கு மாற்றமாக ஒற்றை வாக்கு முறையாகும்.

மாகாணசபைத் தேர்தலைப் பொறுத்தவரை மாவட்ட மட்டத்தில் இரட்டை வாக்கு முறையை அறிமுகப்படுத்தி 60:40 கொண்டுவந்தால் பிரச்சினையில்லை. சில மலையக கட்சிகள் 50: 50 கோருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அது ஜேர்மன் முறையை அடிப்படையாக கொண்டது. இரட்டை வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டால் அது 50:50 ஆ, அல்லது 60:40ஆ என்பது ஒரு பாரிய பிரச்சினையில்லை. ஆனால் ஒற்றை வாக்கானால் அது 50: 50 ஆனாலும் 60: 40 ஆனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சுருங்கக்கூறின் ஒற்றை வாக்கு முறையில் கலப்புத் தேர்தலையோ தனித்தொகுதி முறைத் தேர்தலையோ எந்தக் காரணங்கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது.

வடகிழக்கில் பாதிப்பில்லை.

---------------------------
தமிழர்களைப் பொறுத்தவரை வடகிழக்கிலும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை கிழக்கிலும் ஒற்றை வாக்கினால் பாரிய பாதிப்பு இல்லாவிட்டாலும் வெளியே உள்ள மக்களுக்கு பாரிய பாதிப்பு இருக்கின்றது. எனவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அவர்களுக்கு பாதிப்பில்லாத போதும் ஏனைய பிரதேசத்து தமிழ்பேசும் மக்களுக்காக ஏனைய சிறுபான்மைக் கட்சிகளுக்கு இந்த விடயத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும்.

முஸ்லிம் கட்சிகள் கோட்டை விட்டுவிடக் கூடாது

-----------------------------------------------
உள்ளூராட்சிசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூல விவாதத்தில் எல்லாப் பிரச்சினைகளையும் பேசிவிட்டு கைஉயர்த்தி சோரம் போனது போல் இதுவிடயத்திலும் செய்துவிடாதீர்கள்.

வை எல் எஸ் ஹமீட்-

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -