ஹக்கீமை வீழ்த்துவது எதிர் நீச்சல் போடுவதைப் போன்றாகும்.

நாட்டில் தற்போதைய நிலையில் மக்கள் தேர்தல் ஒன்றை விரைவில் எதிர்நோக்கக் கூடிய சந்தர்ப்பம் இருந்து கொண்டிருப்பது தெளிவாகிறது.

அத்தேர்தல் ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதும் அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் சற்று வித்தியாச போக்கில் தேர்தல்களம் அமையலாம் என்பதிலும் எந்த மாற்றுக் கருத்துமில்லை. காரணம் இங்கு வேறு எந்த மாகாணத்திலும் இல்லாதவாறு பலதரப்பட்ட போட்டி அரசியல் நடைபெறுவது வழக்கமே' இருந்தாலும் இம்முறை சற்று அதிகமாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லவே இல்லை. அதிலும் குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் இன்னும் ஒருபடிமேல் எனலாம்.

இந்த அம்பாறை மாவட்டத்தில் அதிகாரத்தில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஐ.ம.சு. கட்சி போன்றன கட்சிகள் இருந்து வருகிறது.

ஆயினும் முன்னால் அமைச்சர் அதவுல்லாஹ், அமைச்சர் றிஷாத், அமைச்சர் ஹக்கீம் போன்றோர்களிடமே கடுமையான போட்டி நிகழும் என்பதும் இப்போதிருந்தே அறிந்து கொள்ள முடிகிறது.

ஒருபக்கம் எப்படியாவது ஹக்கிமை தோற்கடிக்க வேண்டும் என்று அதாவுல்லாஹ் அணியும் றிஷாத் அணியும் தூயகாங்கிரஸ் கூட்டணியும் களத்தில் அதிதீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தாலும். மறுபுறத்தில் என்ன செய்தாவதும், ஏதையாவதை இழந்தாவதென்றாலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்று பல காய்நகர்த்தல்களை கட்சிதமாய் செய்து கொண்டு வருகிறார் அமைச்சர் ஹக்கீம்.

உண்மையில் ஹக்கிமை வீழ்த்துவது என்பது சாதாரன விடயமல்ல' ஓடும் தண்ணீரை எதிர்த்து எதிர் நீச்சல் போடுவதைப் போன்றாகும். காரணம் ஹக்கிம் பயணித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் அந்த கட்சி மக்கள் மனதில் வேரூன்றி போயிருக்கும் கட்சியாகும்.

இது ஹக்கிமின் திறமையினாலோ, அவரின் உழைப்பினாலோ உருவாக்கப்பட்ட ஒன்றல்ல.
மாறாக அஷ்ரப் எனும் மாமனிதரின் உழைப்பினாலும், ஏழைகளின் துஆக்களாலும் உருவாக்கப்பட்ட விருட்சமாகும்" அதனால்தான் படித்தவர் முதல் சாதாரண பாமரமகன்வரை இக்கட்சியையும், மரச்சின்னத்தையும் உயிராக நேசிப்பதும் 'அதிலுள்ள நல்லது கெட்டது எதுவும் பார்க்காமலும் சிந்திக்காமலும் அதன்பின் அள்ளுண்டு அணிதிரண்டு செல்வதாகும்.

இருந்தும் அதிலுள்ள படித்த மட்டத்தில் இருக்கிற சமூக சிந்தனைவாதிகள் எல்லாவற்றையும் சிந்தித்து செயற்படுவார்கள்' அதனால்தான் அக்கட்சியை விட்டு பிரிந்து சென்ற றிஷாத் பதியுதீன் அதாவுல்லாஹ் போன்றோருக்கு இப்பிரதேசத்தில் வாக்கு அதிகளவாக கிடைத்தது என்பது உண்மையாகும்.

ஆனாலும் படித்த மட்டத்தை விடவும் பாமரமக்களிடம் உரிய மாற்றம் வந்தால் மட்டுமே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி' நாளடவில் அது அரசியல் அதிகார சக்தியாக மாறும் என்பதுதான் யதார்த்தமாகும். மாற்றங்கள் தேவையென்று கடந்த காலங்களில் முயற்சித்து மூக்குடைந்து போன சந்தர்பங்களும் மறக்க முடியாத கசப்பான உண்மையாகும்.

இவ்வாறு இருக்கும் நிலையில் தற்போது அதாவுல்லாஹ் தரப்பினர் றிஷாத் தரப்பினரை சாடுவதும்' றிஷாத் தரப்பினர் அதாவுல்லாஹ் தரப்பினரை சாடுவதும்' தூய காங்கிரஸ் அணியினர் இரண்டுக்கும் நடுவில் அவர்களின் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லுவதும்" இவர்களை அவ்விரண்டு ஆதரவாளர்கள் சாடுவதும் பரவலாக நடந்து கொண்டு வருவதை தற்போது காணலாம்.


இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் அம்பாரை மாவட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை. மீண்டும் மூக்குடையும் நிலமையே ஏற்படுவது மட்டுமல்ல" இது ஹக்கிம் சார்ந்த அணியினரின் வெற்றிக்கு களம் அமைத்து கொடுத்ததாகவே ஆகிவிடும் என்பதே மறைமுகமான உண்மை.


அமைச்சர் ஹக்கிம் சார்ந்த அணியினர் பாமரமக்கள் மத்தியில் செய்து கொண்டிருக்கும் தந்திரமான பிரச்சாரமேதான்" பதவிகளுக்கும் தலைமைக்கும் ஆசைப்பட்டு கட்சியை விட்டுச் சென்றவர்கள் இன்று அஷ்ரப் வளர்த்த கட்சியை அழிக்க புறப்பட்டுள்ளார்கள் என்ற மாயஜாலத்தை பரப்பிக் கொண்டிருப்பதை காணக்கூடியதா இருக்கு.

இதனைக் கேட்டுக்கொண்டிருக்கும் பாமரமக்களிடம்"ஆம் இவர்கள் கூறுவது உண்மைதான் என்ற மனநிலை இலகுவாக உருவாகுவதற்கு, இப்படியான ஆளுக்கொரு பக்கம் ஏசிக்கொள்வதும் மேடைகளில் ஒருத்தொருகொருத்தர் சாடுவதும் களம் அமைத்துக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரு சாதாரன பொதுமகன்' ஏன் இவர்கள் கட்சியை விட்டுப் பிரிந்து சென்றார்கள்?உண்மையில் இந்த கட்சி அன்று பயணித்தது போன்று பயணித்துக் கொண்டிருக்கிறதா? உன்மையில் இவர்கள் பதவிக்காகவே பிரிந்தார்களா?இல்லை பிரிக்கப்பட்டார்களா? என்பதை யோசிக்க மாட்டான்.

மாறாக தலைவர் அஷ்ரப் சமூகத்துக்காக வளர்த்த கட்சியை அழிக்க போகிறார்கள் என்ற வார்த்தைதான்' அவன் உள்ளத்தில் நிலைகொள்ளும் என்பதே உண்மையாகும்.
இவ்வாறு ஆளுக்கொரு மூலையில் வெவ்வேறு திசையில் மேடைப்போட்டு வசைபாடிக் கொண்டிருந்தால் அவர்கள் நினைப்பதிலும் நியாயம் இருக்கத்தானே செய்யும்.

அப்படியென்றால் வேண்டியவை?
முதலில் மாற்றம் தேவை என்று நினைப்பவர்களும், சமூகத்துக்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தனிமனிதரிடமிருந்து மீட்டு மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கூறுபவர்களும்' ஒன்றாக சேர்ந்து மக்களுக்கு உண்மையான தெளிவை கொடுத்தால் மட்டுமே பாமரமக்களின் மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதுதான் உண்மை.

இல்லாது போனால் இப்படியே ஊர் ஊராய் மேடை போட்டு தனக்கு விரும்பியதுபோல் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதனால் ஒரு குறிப்பிட்ட வாக்குகளை எடுக்கலாமே தவிர. அதிகாரத்தை கைப்பற்றுமளவுக்கு எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அனைத்து முயற்சிகளும் ஆதவன் பாடல்களுக்கு மத்தியில் ஹக்கிமின் பிரச்சார நகர்வின் மூலம் அனைத்தும் புஷ்வானமாகிவிடும் மக்கள் மத்தியில் என்பதே உண்மை. கடந்த காலங்களில் கற்றுத்தந்த பாடங்களும் இதுவேயாகும்.

அதாவுல்லாஹ்வும், றிசாட்டும், தூய காங்கிரஸ் அணியினரும் சேர்ந்து ஒன்றாக பயணிப்பது காலத்தின் தேவை என்பது இன்றைய சூழ்நிலையில் நன்றாகவே புரிந்திருந்தும்" ஒவ்வொருவரும் தான்தான் பெரியவன் தனக்குகீழ்தான் மற்றவர்கள் வரவேண்டும் என்ற எண்ணத்தில் வெவ்வேறு கோணத்தில் பிரச்சாரம் செய்வதில் எந்த பலனும் கடைசியில் கிடைக்கப்போவதில்லை.

ஹக்கீம் எனும் தனிமனிதனின் கட்சியோடு போட்டி போடுவதன்றால் பிரச்சினை இல்லை இப்படியான பிரச்சாரங்கள் போதுமானது. மக்கள் நினைக்கும் வெற்றியை அடைந்து கொள்ளலாம் இலகுவில்.
ஆனால் அஷ்ரப் எனும் லேபலுடனும் அஷ்ரப் வளர்த்து விட்டுச் சென்ற மக்களுக்கு மத்தியில் ஹக்கீம் தொற்றிக் கொண்டு பயணிப்பதால்' வெல்லுவது அவ்வளவு சுலபமான விடயமல்ல' எதிர் நீச்சல் போட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இன்று.

ஆகவே இவர்கள் ஒற்றுமையாக பயணித்து பாமரமக்களுக்கு உண்மைத் தன்மையை புரியவைத்து மாற்றத்தை கொண்டுவந்து' சமூகத்துக்கு நல்லதோர் தலைமையை உருவாக்குவார்களா?
அல்லது அமைச்சர் ஹக்கிமின் சாணக்கிய நகர்வுகளால் அனைத்து மேடைப் பேச்சும் புஷ்வானமாகி' சமூகத்தை மீண்டும் சீரழிக்க இடம் கொடுபார்களா?

"ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்" என்பதே யதார்த்தம்' பொறுத்திருந்து பார்ப்போம் சாணக்கியத்தின் நகர்வுகளை எவ்வாறு முறியடிக்கப் போகிறார்கள் கூட்டணியினர் என்று.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -