கேகாலை மாவட்ட தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களை ஒரு பேதும் கைவிடபோவதில்லை அமைச்சர்; பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
கேகாலை மாவட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்களினால் கடந்த ஞாயிறு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் எற்படுத்தபபட்டுள்ள நல்லாட்சியின் மூலம் நுவரெலியா மாவட்டத்தில் தனிவீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தி வருகின்ற அதேவேளை ஏனைய தமிழ் பேசும் தூட்ட தொழிலாளர்கள் வாழும் மாவட்டங்களிலும் விஸ்தரித்ததோடு அமைச்சர் தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்றும் போலி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் புதிய தேர்தல் முறையின் மூலம் தங்கள் பிரஆதசத்தைச் சேர்ந்தவர்களை தெரிவுசெய்யுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்தார்
மேலும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே தொழிற்சங்கத்தினை சார்ந்திருப்பதன் மூலம் அத்தொழிற்சங்கம் மற்றும் கட்சியினை பலப்படுத்துவதன் மூலமும் தங்களுக்கு தேவையான அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கேகாலையில் அமைச்சின் மூலம் அமுல்படுத்தப்பட்ட உட்கடட்மைப்பு வசதிகளான கலாச்சார மண்டபம் மற்றும் பாதை அபிவிருத்தி என்பன வெகுவிரைவில் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படும் எனவும் மக்களுக்கு வீடமைப்பதற்கு தேவையான காணியினை தோட்ட நிர்வாகம் மூலம் வெகுவிரையில் பெற்றுதருவதாகவும் அடு;த்த வருட ஆரம்பத்தில் தனது அமைச்சின் மூலம் மேலதிக வீடுகள் நிர்மாணித்து தரப்படும் எனவும் கூறினார்.