அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்காலத்தில் தன்னை நாட்டை ஆளக் கூடியவர்களில் ஒருவராக குறிப்பிட்டதாகஅமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.இவர், தான் இந்த ஆட்சி மாற்றத்தின் பிரதானமானவர் என்றநினைப்பில் இருப்பது இதற்கான காரணமாகவும் இருக்கலாம். ஆட்சியை மாற்றி என்ன பயன்? இவரால் இந்தஆட்சியினூடாக இதனை சாதித்தோமென அடித்து, எதனையாவது முன் வைத்து கூற முடியுமா?
இவர் கடற் தொழில் அமைச்சராக இருந்த போது மேற்கொள்ளப்பட்டாக கூறப்படும் ஊழல் தொடர்பில், தனக்கு அதுதொடர்பில் நியாபகமில்லையென, மிகவும் பொறுப்பற்ற வகையில் பதில் அளித்து வரும் ஒருவராவார். இவரிடம்நாட்டை ஒப்படைத்தால் எதனையாவது செய்துவிட்டு தனக்கு தெரியாது என்பார். இவரை நம்பி நாட்டைஒப்படைத்தல், நாட்டின் நிலை என்னவாகும்.
இவர் இன்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதில், முஸ்லிம் மக்களின் பெருமளவான வாக்குகள்உள்ளன. இருந்த போதிலும் இவர் முஸ்லிம் மக்களுக்கு என்ன செய்துள்ளார். இவர் பிரதிநிதித்துவப்படுத்தும்மாவட்டமான களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பல்வேறு தேவைகளுடன் உள்ளனர். அண்மையில் டெங்குநோய் தாக்கத்தால் அம்மக்கள் பாதிக்கப்பட்ட போது கூட இவர் எட்டிப்பார்த்திருக்கவில்லை.
இது தொடர்பானநடவடிக்கை எடுக்கும் வகையிலான சம்பந்தப்பட்ட அமைச்சு இவரிடமே இருந்தது.
அளுத்கமை கலவரம் தொடர்பில் இவரிடம் வினா எழுப்பப்பட்ட போது கூட, அது பற்றி தனக்கு தெரியாது என கூறிநழுவி இருந்தார். ஆட்சி மாற்றத்தில் பிரதான பங்கு வகித்த அளுத்கமை கலவரம் தொடர்பில், ஆட்சி மாற்றத்தின்பிரதான பங்காளரான இவர் இப்படி பொடு போக்கான பதிலை அளிக்க முடியாது. இவர் பிரதிநிதித்துவப்படுத்தும்மாவட்டம் தொடர்பான பிரச்சினையையே இவ் ஆட்சியின் முக்கிய பங்காளரான இவருக்கு தெரியாதுள்ள போது, ஒருநாட்டின் பிரச்சினை பற்றி இவர் எங்கே அறிந்து செயற்படப் போகிறார்? இவர் முஸ்லிம்களை மையப்படுத்தியேதனது திட்டங்களை வகுப்பார்.

இதன் ஒரு அங்கமாகவே அண்மையில் நிந்தவூரில் சிறிய அபிவிருத்திக்கு பாரியமேடை அமைத்து படம் காட்டியதை நோக்கலாம். இது தொடர்பில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக செயற்படவேண்டும்.