நாடு மோசமான கொள்கைகளுடன் தவறான திசையில் பயணிக்கிறது..

ல்லாட்சி அரசாங்கம் தமது ஆட்சியை தக்கவைக்க தேர்தல்களை பிற்போட்டு வருகின்றனர்.பெண்களின்பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளை கூறிக்கொண்டு சகல தேர்தல்களையும் பிட்போடவே முயற்சித்துவருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் 20 வருட அரசியல் வாழ்வின் பூர்த்த்தியை முன்னிட்டுஇடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,!


நாட்டுக்கு பொருத்தம் இல்லாத கொள்கைகளையும், சட்டங்களையும் கொண்டுவந்து நாட்டின் இறைமையைஅழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கம் தந்திரமான முறையில் தேர்தலை பிற்போட்டு தமது ஆட்சியை தக்கவைக்கை முயற்சித்துவருகின்றனர்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் தேர்தலை பிற்போட தயாராக இல்லையாம். எனினும் பெண்களின் அரசியல்பலத்தை பெருக்கவே தேர்தல்கள் தாமதமாகின்றது என்றும் அரசாங்கம் கூறுகின்றது.

நாம் உருவாக்கிய இந்த நாட்டின் அமைதியும் ஜனநாயகமும் இன்று அழிக்கப்பட்டு மோசமான திசையில் நாடுபயணித்து வருகின்றது. மேலும் இந்த நாட்டுக்கு ஏற்கப்படாத பல சட்டங்கள், கொள்கைகள் இந்த ஆட்சியில்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் போது இந்த நாட்டை ஆதரிக்கும், நேசிக்கும் எம்மால் ஒருபோதும்ஏற்றுகொள்ளமுடியாது உள்ளது என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -