க.கிஷாந்தன்-
முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி வீட்டின் கூரை மீது விழுந்ததில் இருவர் காயம்பட்ட நிலையில் தப்பி ஓடியுள்ளனர்
அட்டன் நகரத்திலிருந்து அட்டன் காமினிபுர பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி காமினிபுர பிரதேச பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் மோதுண்டு சுமார் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து குடியிருப்பின் மீது வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து 25.09.2017 அன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்தவரும் தப்பி ஓடியுள்ளனர். அதன்பின் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இவ் விபத்தில் முச்சக்கரவண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதோடு, வீட்டிற்கும் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.