சட்ட திருத்தங்கள் பற்றிய பயிற்சி பட்டறை இன்று


அப்துல்சலாம் யாசீம்-

தேசிய சமாதான பேரவையும் -சக்தி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள திருகோணமலை மாவட்ட சமாதானக்குழுவின் தற்போதைய இலங்கை
சட்ட திருத்தங்கள் பற்றிய பயிற்சி பட்டறை இன்று (23) திருகோணமலை வாடி வீடு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கையில் அனைத்து சமயங்கள் மற்றும் அனைத்து இணங்களுக்கு இடையிலான மாதாந்த செயலமர்வின் போது அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றிய விடயங்கள்
சட்டத்தரணி ஜகத் லியனாராய்ச்சியினால் விளக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் இக்குழுவின் ஊடாக கிராம மட்டத்தில் சிறந்த முறையில் செயற்படும் தொண்டர்களை தெரிவு செய்து கிராம மட்டத்திலும்-பிரதேசத்திலும் மாவட்ட மட்டத்திலும் பேச்சவார்த்தை மூலம் இன ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் செயற்படும் தொண்டர்களை இக்குழுவிற்கு தெரிவு செய்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக சக்தி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.ஏ.சதுராணி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அனைத்து இனங்களையும் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இச்சமாதானக்குழு செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -