யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நேற்று (02.09.17) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள கைதியான தனது கணவரை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்றையதினம் பார்வையிட வந்த போது சவர்க்கார கட்டிற்குள் கஞ்சாவினை மறைத்து வைத்து சிறைச்சாலைக்குள் சென்றுள்ளார்.
சிறைச்சாலை உத்தியோகத்தார்களினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, சவர்க்காரத்திற்குள் கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை உத்தியோகத்ர்கள் குறித்த பெண்ணை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.(மடவவள)