நிலாவெளி ரஸூல் தோட்ட காணியில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக தோட்டங்களும் மற்றும் குடியிருந்து வந்த காணியினை 1980 ம் ஆண்டு காலப்பகுதியில் சுற்றுலாத்துறை சபையினால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த பல வருடகாலமாக வசித்து வந்த காணியினை நில அளவை செய்ய பொலிஸாருடன் சென்ற வேளையில் பிரதேசத்தில் வசித்து வரும் மக்கள் தமக்கு நியாயம்கோரி பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீண்டகாலமாக தாம் வசித்த பகுதியினை தமக்கு வழங்க கோரி எதிரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் குறித்த பகுதிக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் விஜயம் மேற்கொண்டு இது தொடர்பாக விளக்கம் அளித்த நிலையில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு பாராளுமன்றதில் (Oversight Committee) கூட்டத்தில் மீளவும் அவைகள் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு தீர்ப்பதற்கு ஆவணை செய்ய்ப்படவேண்டும் என்ற விளக்கம் அளிக்கப்பட்டு மக்கள் அமைதியாக சென்றனர்.