நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப பத்தனை மவுண்டவேணன் தோட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற தனி வீட்டுத்திட்டத்தில் ஆயுத பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பத்தனை அமைப்பாளர் விஜயவீரனின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் , பெருந்தோட்ட மனித வள நிறுவனத்தின் அட்டன் பிராந்திய இயக்குநர் அத்துல சேனாரத்ன , தோட்ட அதிகாரி , தொழிலாளர் தேசிய சங்கத்தின் பத்தனை அமைப்பாளர் லெட்சுமணன் மற்றும் ராமகிருஷ்ணன் , ஜெயராம் , சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
50 தனி வீடுகளைக் கொண்ட மவுண்ட்வேணன் கிராமத்தின் நிர்மாணப்பணிகள் விரைவில் பூர்த்தியடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.