சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டுயானைகளின் தொல்லைகள் தற்போது அதிகரித்து வருகின்றது




யு.எல்.எம். றியாஸ்-

ம்மாந்துறை பிரதேசத்தின் எல்லைக் கிராமங்கள் தற்போது காட்டுயானைகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது இதனால் இப் பகுதி மக்கள் இரவு வேளைகளில் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்துவருகின்றனர்.
நேற்றும், இன்றும் சம்மாந்துறை பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்குதலால் பலபிரதேசங்கள் சேதத்திற்குள்ளாகியுயள்ளன.
சம்மாந்துறை அலவாக்கரை பிரதேசத்தில் இன்று அதிகாலை சுமார் 2.15 மணியளவில் ஊருக்குள் நுழைந்த காட்டுயானைகள் வீடுகள் சுவர்கள்,மற்றும் வீட்டுத்தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளன.
இது தாக்குதலினால் ஒரு வீட்டின் கூரை உட்பட வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது அத்துடன் வீட்டுத்தோட்டங்களையும் சேதமாக்கியுள்ளது .எதுவித உயிராபத்துமின்றி வீட்டில் உறங்கியவர்கள் தெய்வாதீனமாக தப்பிச்சென்றனர். 

யானைத்தாக்குதலுக்கு இலக்கண அலவாக்கரை பிரதேசத்திற்கு சம்மாந்துறை தொகுதி ஐக்கிய தேசியக் கடைசியில் பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி நேரில் சென்று பார்வையிடடார்.

இதேவேளை நேற்று சம்மாந்துறை சமிடபுரம் உடங்கா - 2 .கிராமத்தில் உள்ள அரிசி ஆலையொன்றும் யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது அத்துடன் அரிசி ஆலையினுள் இருந்த நெல் மூடடைகளையும் சேதப்படுத்தியுள்ளது. 

சம்மாந்துறை பிரதேசத்தில் வேளாண்மை அறுவடைக்குப்பின்னரான காலத்திலேயே காட்டுயானைகளின் ஊருக்குள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -