ஒரு நிலவும் சில சொறி நாய்களும்!

எஸ். ஹமீத்-

**கோபுரம் சரியில்லையென்று சில
குப்பை மேடுகள் குறை கூறுகின்றன.....

**செங்கோல் பங்கமென்று சில
செருப்புகள் பறைசாற்றுகின்றன.....

**மலர் நாறுகிறதென்று சில
மலக்குழிகள் புகார் கொடுக்கின்றன.

**ஆற்று நீர் அசுத்தமென்று சில
சாக்கடைகள் சத்தியம் செய்கின்றன.

**வண்ண மயிலின் பேரழகைச் சில
வான்கோழிகள் வசைபாடுகின்றன....

**பௌர்ணமி நிலவைப் பார்த்துச் சில
சொறி நாய்கள் ஊளையிடுகின்றன.....

**புலியைச் சில
புழுக்கள் குறை சொல்கின்றன....

**சிங்கத்தைச் சில
சிறுநரிகள் குற்றமென்கின்றன.....

**வெள்ளை மனம் கொண்டவரைச் சில
கொள்ளைக்காரர்கள் கூண்டிலேற்ற முனைகின்றார்கள்....

**ஏழைகளின் தோழனைச் சில
ஏமாற்றுப் பேர்வழிகள் இல்லாமலாக்கப் பார்க்கிறார்கள்....

**ஊரைச் சுருட்டி உலையில் போட்டவர்கள் ஓர்
உத்தமரை ஊழல்வாதி என்கிறார்கள்....

**காசுக்கு மோசம் போனவர்கள்
ஒரு கடமை வீரனைக்
காட்டிக் கொடுக்கக் கங்கணம் கட்டியிருக்கிறார்கள்....

**கேட்ட பணம் கிடைக்காது போனதால்
கெட்டவரென அந்த நல்லவரைச் சில
கேடுகெட்டவர்கள் சொல்கிறார்கள்...

**தர்மத்தைச் சூது கவ்வும்...இறுதியில்
தர்மமே வெல்லும்!

**நேர்மைமிகு அமைச்சர் ரிசாத்
நிச்சயம் வெல்வார்!!

**இன்ஷா அல்லாஹ்!!!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -