மீண்டுமொரு அஷ்ரப் யுகம் ஆரம்பம்..!

பி.எம்.சிபான்-

ரே காலனிலை, ஒரே அதிகாரம் என்றும் நிலைத்திருப்பதில்லை. காலச்சுழற்சி களம் காட்டும் என்ற வாசகங்களை மெய்யானது நேற்று . "காலம் கழியும் உண்மை ஒழிரும்" என்ற தொனிப்பொருளுடன் ஓங்கி ஒலித்தது பாலமுனைக்கூட்டம். கிழக்கு முஸ்லிம் அரசியல் போக்கினுடைய மாற்றங்கள் பாலமுனை மண்ணில் இருந்தே அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அதற்கு சிகரம் வைத்தாற்போல் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தினில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைமை இளைஞர்கள் புடைசூழ தோளில் சுமந்து வரப்பட்டமை மயிர்கூச்செறியச் செய்யும் நிகழ்வாகும். மகுடம் துறந்து அதிகாரம் இழந்து வீசிய கையும் வெறுங்கையுமாக இருக்கும் அதாவுல்லாவை தோளில் சுமக்க வேண்டியதற்கான தேவை என்ன என்பதனை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு , அவரின் பின்னால் பொதிந்துள்ள "அறம் சார்ந்த அரசியல் புலப்படும்".

சீனாவிலே கம்மீயூனசித்துக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பேரறிஞன் லயோசு. அவனுடைய தத்துவங்கள் தகுத்தஜின்கள் என அறியப்படுகின்றன. அவன் ஒரு இடத்தில் குறிப்பிடும் போது " எந்த ஒரு தோல்விக்குப் பின்னாலும் மிகப்பெரும் வெற்றி காத்திருக்கின்றது" என்கின்றான். அது அதாவுல்லாவின் அரசியல்வாழ்வில் பரிணமிப்பதனை நாம் அனைவரும் காணக்கிடைத்திருப்பது சிறப்பம்சமாகும்.

எவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக் காலகட்டத்தில் இளைஞர்கள் புடைசூழ பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் சிங்கமென வந்தார்களோ , அதே போன்று இரண்டாம் அஷ்ரபான அதாவுல்லா வரலாறாகின்றார். இரண்டாம் அஷ்ரப் யுகம் மலர்கிறது. முஸ்லிம்களாகிய எமது அரசியல் அபிலாசைகளை மீட்டெடுத்துக் கொள்ள அஷ்ரப் பாசறையினில் ஆரம்பம் முதல் புடம் போட்ட தொண்டன் அதாவுல்லாவின் கரங்களை பலப்படுத்த பலபாகங்களில் இருந்தும் தயாராவோம்.

முஸ்லிம்களை காட்டிக்கொடுத்தும், நல்லாட்சி அரசின் பின்னால் நக்கிப்பிழைத்து, வடகிழக்குக்கு வெளியேவாழும் முஸ்லிம்களின் உரிமைகளை குழிதோண்டிப்புதைத்த அலங்காரக்கதிரை ஜடங்களை புறக்கணிப்போம். புதுயுகம் படைப்போம்..!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -