இ.போ.ச பயணிகள் பஸ் மீது இரவில் கல்வீச்சு


ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ட்டக்களப்பு – கொண்டான் நெடுஞ்சாலையில் சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை 16.09.2017 இரவு 10.30 மணியளவில் கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிச் பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பயணிகள் பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலவிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பஸ் சாரதிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதோடு பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் நொருங்கியுள்ளன.

தெருவில் மின்னொளி இல்லாத வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இருவரே கல்வீச்சுத் தாக்குதலை நடாத்திவிட்டுத் தலைமறைவானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மத்திய பஸ் டிப்போவுக்குச் சொந்தமான இந்த பஸ் நீண்டகாலமாக மட்டக்களப்பு - கொழும்பு, கொழும்பு – மட்டக்களப்புக்கான சீரான சேவையை மேற்கொண்டு வருவதோடு பயணிகளின் நம்பிக்கையைப் பெற்றதாகவும் இருந்து வருகின்ற நிலையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -