நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சகல பதவிகளுக்குமான உறுப்பினர்கள் தெரிவு செய்யும் தேர்தல் கொட்டகலை காங்கிரஸின் தொழில் நுற்ப நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதுடன் தெரிவானவர்களுக்கான நியமணக்கடிதம் வழங்கும் நிகழ்வும் 25.09.2017 நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஆறுமுகம் தொண்டமான். தலைவராக முத்துசிவலிங்கம் பிரதித்தலைவராக ஆகரப்பத்தனை டயகம சந்திரிகாமம் தோட்டத்தை சேர்ந்த அமாவாசை ராமையா, ஆகியோர் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டனர்
காங்கிரஸின் மாவட்ட ரீதியிலான உப தலைவர்களாக. நுவரெலியா .மருதபாண்டி ராமேவரன். தலவாக்கலை. பி.சக்திவேல். அட்டன். கணபதி கணகராஜ். ஊவா மாகாணத்திற்கான உபதலைவராக செந்தில் தொண்டமான். கண்டி மாவட்டம் மதியுகராஜா .மாத்தளை மாவட்டம் மதியுக ராஜா ரத்தினபுரி .ராஜமனி ஆகியோர் தெரிவாகினர்.
இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் முன்மொழிவாள் தெரிவு செய்பட்ட உபதலைவர்களாக எஸ். ரவீந்திரன். கே.கணேசமூர்த்து .மாரிமுத்து .சதாசிவன் ஆகியோர் தெரிவாகினர்
தேசிய அமைப்பளர்களாக வாக்களிப்பின் மூலம் அனுசியா சிவராஜா. வெள்ளையன் தினேஸ்.அருள்சாமி ஆகியோரும் பொதுச்செயலாளரின் முன்மொழிவினூடாக பி.ராஜதுரை. சிவராஜா.ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இளைஞர் அணி உதவி செயலாளர் பழனி சசிகுமார். ராஜமனிபிரசாத் ஆகியோரும் மகளீர் அணி உப செயலாளர்களாக செந்தமிழ் செல்வி.சுந்தராம்பாள் ஆகியோர் தெரிவாகினர்.