பறந்துபோயிற்று கவிக்குயில்....
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
இதுவரை ஆழ்மனதில் பதிந்திருந்த
அந்தக்குரலின் இனிமையை
இனியும் எப்படிக்கேட்பேன் !
அகரம் கற்கவேண்டிய
ஐந்தாவது வயதில்
சுயமாய் கவிகோர்த்த கவிக்குயிலே !
என் எட்டாவது வயதில்
எம்மூர்மேடையில்
முதலாவது அரங்கேற்றம்
நடைபெற்றதாமே !
அன்றுஆரம்பித்த கவிப்பயணம்
இன்றோடு முடிந்து விட்டதா தாயே !
பிறர்க்கில்லை
பிள்ளை என்பார் கவியால்
தாயே பெரும் துயராய்
வரம்கேட்டாய் !
பிரிந்திருந்தால் குடும்பத்தை
கவியால் பேசவைத்துச்
சேர்த்து வைத்தாய் !
வாடிய குமர்களுக்காய்
வரன்வேண்டிக்
கவிபடித்தாய் !
அழும் குழந்தையையே
அழவதைப்போல் தாலாட்டி
இளய மனசுகளை
ஈர்த்து விட்ட என்தாயே............ !
கேட்டவுடனே நெக்கி
கிறுகிறுத்தாப் போலருந்து
பாஞ்சுழுந்து வந்தோம் - நானும்
பாலமுனை பாறூக்கும்
ஊட்டடிக்கி வந்தேனும்மா
ஒங்குட முகம் பாப்பமெண்டு செல்லி
பாக்க முறையில்லாம _ நாங்க
பரிதவிச்சி நிண்டோங்கம்மா.. !
அசறால தாண்டி ஒங்கள
அடக்குறதாம் எண்டாங்க
கிறுக மனமில்லாமல் - நாங்க
கிளம்பி வந்தோம் உம்மாண்டே !
அவட பாவம் பொறுத்தருள
படச்சவனைக் கையேந்தி
கேளுங்க மக்காள் - செய்தி
கெடச்சவங்க எல்லாரும் !
₹₹₹₹₹₹₹
உயர் சுவர்ககம் பெற்று
உவப்பாக வாழ வல்ல
இறைவனை
பிரார்த்திப்போமாக....
ஆமீன்!
எழுகவி ஜெலீல்,
அக்கரைப்பற்று.