சுகநலப் பாதுகாப்பு மற்றும் துப்புரவு ஏற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்தினால் தேசிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பாடசாலை மாணவிகள் பிரத்தியேக உடல் சுகாதாரத்தைப் பேணுவதற்காக தனியான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
தெற்காசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சகொசான் அமைப்பின் பணிக்குழுவின் 10ஆவது மாநாடு திங்கள்கிழமை (11) கொழும்பு ஓசோ ஹோட்டலில் ஆரம்பமானபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ;, பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றும் சகொசான் மாநாட்டின் 10ஆவது பிராந்திய பணிக்குழுவின் கூட்டம் தற்பொழுது கொழும்பில் நடைபெறுகின்றது. இதில் உலக வங்கி, ஐ.நா சிறுவர் நிதியம் ஆகியவற்றுடன் ஏனைய தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
அங்கு உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தாவது,
போதிய கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தினால் தெற்காசிய நாடுகள் பலவற்றில் வசதிக்கும் மக்கள் வெட்ட வெளிகளிலும், சிறிய புதர்காடுகளிலும் மலங்கழித்து வருவது இந்தப் பிராந்தியத்தின் சுகாதாரத்திற்கு பெரிதும் கேடு விளைவித்து வருகின்றது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண்பதற்காகவே சகொசான் அமைப்பு இவ்வாறான தொடர் கூட்டங்களையும், மாநாடுகளையும் உறுப்பு நாடுகளில் சுழற்சி முறையில் நடாத்தி வருகின்றது.
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சகொசான் மாநாட்டிற்கு முன்னோடியாகவும் அதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்காகவும், ஏனைய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவுமே இந்த பணிக்குழுக் கூட்டம் தற்கொழுது கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
துப்பரவு ஏற்பாடுகளை பொறுத்தவரை பெண்களுக்கு குறிப்பாக பாடசாலை மாணவிகளுக்கு அவர்களது பிரத்தியேக உடற் சுகாதாரம் கருதி வசதிகளுடன் கூடிய தனியான கழிப்பறைகளை அமைத்துக் கொடுப்பது காலத்தின் இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. எனவே எமது அமைச்சும், கல்வி அமைச்சும், சுகாதார அமைச்சும், நிதியமைச்சினதும் ஒத்துழைப்புடன் இதில் அதிக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். அவ்வாறே மாற்றுத்திறனாளிகளின் துப்புரவு ஏற்பாடுகளிலும் நவீன வசதிகளை செய்து கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நாட்டின் ஆதிவாசிகள் பழங்காலத்திலிருந்து இருந்தே கழிவகற்றல் மற்றும் துப்புரவு ஏற்பாடுகள் விடயத்தில் கடைப்பிடித்து வரும் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் முகமாக நவீன கழிப்பறை வசதிகளை செய்து கொடுப்பதற்கு அவர்களது கோத்திரத் தலைவர்களுடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார்.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில்; அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தீப்தி சுமணசேகர மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதி ஆகியோரும் உரையாற்றினர்.