வித்தியா வழக்கு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு மலையக மக்கள் நீதிக்கு தலை வணங்கி பாராட்டுகின்றனர்.

டுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா வழக்கு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு மலையக மக்கள் நீதிக்கு தலை வணங்கி பாராட்டுகின்றனர்.

கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் கூட்டு வன்கொடுமையின் பின் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏழு பேருக்கு 27.09.2017 அன்று மூன்று நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.

பல வருட காலமாக இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வரும் என்று எதிர்பார்த்திருந்த மலையக மக்கள் 27.09.2017 அன்று காலை முதல் ஊடகங்களின் ஊடாக வெளியான செய்தியை கேட்டு எந்த நேரத்தில் இவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் 27.09.2017 அன்று மதியம் மரண தண்டனை கிடைத்த செய்தியை கேட்டு பூரிப்பு அடைந்த மலையக மக்கள் இந்த நாட்டில் இவ்வாறான இழிவான செயலில் ஈடுப்பட எண்ணும் நபர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து விட்டதாக இந்த தீர்ப்பை தந்த நீதிபதிகளுக்கு சிரம் தாய்த்து நன்றி தெரிவிப்பதாகவும், மலையக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது போன்று நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் காணப்படுகின்றது.

மலையகத்திலும் கூட இவ்வாறாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் வழக்குகள் இருக்கின்றது. இனிமேலும் இந்த நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் வாழ்கின்ற சிறுவர்கள் சுதந்திரமாக அச்சமின்றி அவர்களின் பயணத்தை தொடர இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்திருப்பதாக மலையக மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -