ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் அரசியலுக்கு எப்போது வர வேண்டுமோ அப்போது வருவார்

க.கிஷாந்தன்-

லங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களின் சக்தியையும் பலத்தையும் கொண்டு செயல்படுகின்றது. இ.தொ.காவின் பங்காளிகள் தொழிலாளர்களாகிய நீங்கள் தான். மலையகத்தில் உள்ள பல ஆலயங்களுக்கு இ.தொ.கா பல உதவிகளை செய்துள்ளது. ஆனால் இவை அனைத்தும் காங்கிரஸ் விளம்பரத்தை தேடி செய்யவில்லை என மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.

அட்டன் லெதண்டி கலனிவத்தை தோட்டத்தில் 26.09.2017 அன்று ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு நவக்கிரக சிலை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் தலைவர் வெள்ளையன் தினேஷ், இ.தொ.கா. இளைஞர் அணி செயலாளர் ராஜமணி பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் காலத்தில் எமது மக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாமல் போய்விடும் நேரத்தில் நாம் எதிர்பார்க்கும் திட்டங்கள் இடம்பெறுவதில்லை. எமது தலைவர் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் தலைவர் அவர் ஆறுமுகன் தொண்டமான் என்பதை நீங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் எவ்வாறாக அபிவிருத்தி திட்டங்களில் முன்னேறி சென்றுள்ளோம் என்பதையும் உணர வேண்டும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேசிய சபையை அமைக்கும். புதிய நிர்வாக சபை அங்கத்தவர்களை நியமிக்கும். இந்த நிகழ்வு கொட்டகலையில் இடம்பெற்றது. ஆனால் விமர்சனம் செய்பவர்கள் ஒன்றை எதிர்பார்தார்கள். ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமானை கட்சிக்குள் கொண்டு வரவே இந்த தேசிய சபை கூடுவதாக விமர்சனம் செய்தார்கள்.

ஆனால் ஜீவன் தொண்டமான் தேசிய சபை அங்கத்தவர் அல்ல. கட்சியில் இருக்கின்றார். அவர் எப்போது வர வேண்டுமோ. அப்போது வருவார்.

இ.தொ.கா ஜனநாயகத்திற்குரிய தேசிய கட்சியாகும். இக்கட்சியில் உள்ளவர்கள் இ.தொ.காவின் பங்காளிகளாக தொழிலாளர்கள் தான். ஆனால் ஏனைய கட்சிகள் மலையகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் கொண்டு வரும் திட்ட நிகழ்வுகளில் சௌமிய மூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரை விமர்சனம் செய்யாமல் அந்நிகழ்ச்சியை முன்னெடுக்க முடியவில்லை.

இவர்களை விமர்சித்தால் மாத்திரமே இவர்கள் மலையகத்தில் அரசியல் செய்ய முடியும். அடுத்த மாதம் அளவில் 100 ஆலயங்களுக்கு அபிவிருத்தி பணிகளுக்காக பொருட்கள், உபகரணங்கள் என வழங்கப்படவுள்ளது எனவும் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -