இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஹிரா பெளண்டேசனின் அனுசரனையில் வறிய மக்களுக்குகுடிநீர் இணைப்பு வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று 06/09/2017 புதன்கிழமை முன்னாள் கல்முனை மாநகர முதல்வர்கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்துகொண்டுதெரிவுசெய்யப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு குடிநீர் இணைப்புக்கானபத்திரங்களை வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் பயனாளிகள் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.