சைட்டம் “தீப்பற்றிய இரவு” போராட்டம்..!

க.கிஷாந்தன்-
மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் விவகாரம் தொடர்பில் மருத்துவ பீட மாணவர்கள் 30.08.2017 அன்று இரவு 7 மணியளவில் தீப்பற்றிய இரவு என்ற போராட்டத்தை மலையகத்திலும் முன்னெடுத்தனர். அந்தவகையில் அட்டன், நுவரெலியா, தலவாக்கலை போன்ற நகரங்களிலும் இவ் போராட்டத்தை நடத்தினர்.

இந்தவகையில் தலவாக்கலை நகரின் மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் சைட்டத்துக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என கோரி தீப்பந்தங்களை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி, 50ற்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மருத்துவ பீட மணாவர்கள் உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவுகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

தேசிய எதிர்ப்பு போராட்டத்தை நாடாளவிய ரீதியில் முன்னெடுத்த மருத்துவ பீட மாணவர்கள் 30.08.2017 அன்று நாடாளவிய ரீதியில் தீப்பற்றிய இரவு போராட்டத்தையும் முன்னெடுத்தமை குறிப்பிடதக்கது. அதேவேளையில் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூயின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -