எம்.வை.அமீர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீட்டுக்கு வீடு மரம் எனும் திட்டத்தின் ஒரு அங்கமாக சாய்ந்தமருதில் வீடுகளில் மரக்கன்றுகள் நாடும் திட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளரும் சமூக சிந்தனையாளரும் யஹ்யாகான் பௌண்டேசனின் தலைவரும் தொழிலதிபருமான ஏ.சி.யஹ்யாகானின் தலைமையில் 2017-09-04 ஆம் திகதி இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருதில் உள்ள பல வீடுகளில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் குறித்த நிகழ்வு தொடர்பான கையேடும் குறித்த வீடுகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
நிழ்வுகளின்போது கட்சியின் தொண்டர்களும் கலந்து கொண்டிருந்தனர்.