டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்





க.கிஷாந்தன்-

“நான் சூழலை பாதுகாக்க விரும்பவில்லை. மாறாக பாதுகாப்பான சூழல் உள்ள உலகையே உருவாக்க விரும்புகின்றேன்” எனும் தொனிப்பொருளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று 23.09.2017 அன்று கொட்டகலையில் இடம்பெற்றது. கொட்டகலை நகரம் முழுவதும் மேற்படி சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கொட்டகலை பிரதேச பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொலிஸார் ஆகியோர் இந்த சிரமதானப் பணிகளில் கொட்டகலை நகரில் பிரதான வீதியின் இருமருங்கிலும் உள்ள வடிகான்களும் துப்புரவு செய்யப்பட்டதோடு, டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும், வீதி நாடகமும் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்படும் பல இடங்கள் இதன் போது இனங்காணப்பட்டு ஒழிக்கப்பட்டது.

இச்சிரமதானப் பணிகளில் கொட்டகலை பிரதேச பாடசாலை மாணவ, மாணவிகள், பத்தனை பொலிஸார், ஆசிரியர்கள், சுகாதார பரிசோதகர் என பலரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -