எம்.எஸ்.ஸாகிர்-
முஹர்ரம் புதுவருடத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய முஹர்ரம் புதுவருட நிகழ்வு நேற்று (25) மாலை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தபால், தபால் சேவைகள் முஸ்லிம் சமய அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையிலும் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம். ஆர். எம். மலிக் (நளீமி) வழிகாட்டலிலும் அஷ்ஷேக் எம்.எம்.எம். முப்தி (நளீமி)யின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் ஹலீம் சான்றிதழ் வழங்குவதையும் அருகில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஏ. எச்.எம்.பௌசி, பிரத்தியேக செயலாளர் பாஹிம் ஹாசிம் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.