ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கை இணை-ஏற்பாட்டில் மனிதாபிமான நடவடிக்கை மற்றும் அனர்த்த உதவிக்கான ஆகாயவழி தரையிறக்க அணிவகுப்பு செப்டெம்பெர் 13 முதல் 18 வரை நடைபெற்றது.
ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கை ஏற்பாட்டில் இருவருடங்களுக்கு ஒரு முறை நடாத்தப்படும் பசுபிக் ஆகாயவழி தரையிறக்க அணிவகுப்பானது ஐக்கிய அமெரிக்கா, இலங்கை, மற்றும் ஏனைய இந்து-ஆசிய-பசுபிக்நாடுகளின் பங்குபற்றுதலுடன் மனிதாபிமான நடவடிக்கை மற்றும் அனர்த்த உதவி நோக்குடைய பயிற்சியாக இது நடைபெற்றது.
இதில் பங்குபற்றியவர்கள் நடவடிக்கை வியூகம் வகுத்தல், சரக்கு கையாளுகை மற்றும் ஏற்றுதல், ஆகாய-தரைமற்றும் ஆகாயவழி இறக்கம் போன்ற பயிற்சிகள் பெற்றனர்.
.ந்து-ஆசிய-பசுபிக் பிராந்தியம் உள்ளிட்ட 36 நாடுகளை உள்ளடக்கி, புவி மேற்பரப்பில் 53சதவீதத்தையும், உலக சனத்தொகையில் 60 வீத மக்களைக் கொண்டுள்ளதுடன், உலகின் அதிகளவு இயற்கை அனர்த்தம் நிகழும் வலயமாகவும் உள்ளது.
கடந்தகால அனுபவ அடிப்படையில் சிவில் அனர்த்த முகாமைத்துவ நிறுவனங்களுக்கு வினைத்திறனாக உதவிகளை வழங்குவதற்கு, நாடுகள் கூட்டுறவுடன் செயற்படுவதுடன் இணை செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
அமெரிக்க வான்படைக்குரிய, மிசிசிப்பி கீஸ்லர் வான்படைத்தளத்தின் 815வது ஆகாயவழி படையணியின் சி-130து ஹர்குயுலிஸ் விமானம் ஒன்றும், அர்கன்சஸ் லிட்டில் றொக் விமானப்படைத்தளத்தின் 327வது ஆகாயவழிப் படையணியின் சி-130து விமானம் ஒன்றும்,
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய விமானங்களும் பறப்புப் பயிற்சிக்கான பாகத்தில் பங்குகொண்டன.
பங்குபற்றியவர்கள் உண்மையான மனிதாபிமான உதவி நடவடிக்கையின் போது செயற்படவேண்டிய ஆகாயவழி நுணுக்கங்களுக்கான பயிற்சிகளைப் பெற்றனர்.
இதற்கு முன்னைய பசுபிக் ஆகாயவழி அணிவகுப்பை 2011ல் இலங்கை இணை-ஏற்பாடு
செய்திருந்ததுடன், பங்குபற்றியவர்கள் வெப்பவலய மாதிரி சூறாவளி அனர்த்தத்தின் போது செயற்படவேண்டிய பயிற்சிகளை மேற்கொண்டனர்.