43 தேசிய விளையாட்டு விழாவின் காராத்தே போட்டிகள் கண்டி திகன உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இப்போட்டியில் கிழக்கு மாகாண சார்பாக கலந்துகொண்ட பாலுராஜ் காராத்தே -டூ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
இவர் தொடர்ச்சியாக 6வது முறையாகவூம்(2012-2017) தனது சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி முதலிடம்பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளதோடு தெற்காசிய காராத்தே போட்டிகளில் கலந்துகொண்டு 3முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளமையூம் குறிப்பிடத்தக்கது .
பாலுராஜ் அம்பாறை மாவட்ட கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவில் உள்ள சேனைக்குடியிருப்யை சேர்ந்தவர். இவர் JKMO கழகத்தின் கிழக்கு மாகாணத்தின் பிரதம போதனாசிரியரான Sensei (Eng) S.முருகேந்திரன் அவர்களின் பயிற்றுவிப்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை நாயகனாக திகழ்கின்றார்.
தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தனது தாயார் மற்றும் குடும்பத்தினர் பயிற்றுவிப்பாளரான தமது சகோதரர் சௌ.முருகேந்திரன், அம்பாரை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன், பிரதேச செயலாளர் எஸ்.லவநாதன், கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் எம்.மதிவண்ணன் உள்ளிட்டோருக்கு பால்ராஜ் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.