மக்கள் பணத்தினை மக்களிடமே திரும்ப கையளித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்





எம்.ரீ. ஹைதர் அலி-

திர்வரும் 30.09.2017ஆம் திகதி - சனிக்கிழமையுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தனக்கென கிழக்கு மாகாண சபையினால் வழங்கி வைக்கப்பட்ட கொடுப்பனவில் மீதமாகிய மற்றும் எஞ்சிய அலுவலக உதவிப் பொருட்கள் என்பனவற்றினை கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் கையளித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 85வது அமர்வான இறுதிக்கு முந்திய அமர்வு இன்று 25.09.2017ஆந்திகதி - திங்கட்கிழமை கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் கௌரவ சந்திரதாச கலப்பத்தி தலைமையில் நடைபெற்றது. 


இதன்போது சபை நடவடிக்கைகளில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் கிழக்கு மாகாண சபையினால் தனக்கு வழங்கப்பட்ட மாதாந்த சம்பளத்தில் மக்கள் பணிக்காக செலவு செய்த தொகை தவிர்ந்து மீதமாகவுள்ள தொகை, கிழக்கு மாகாண சபையின் அமர்வுகளின் போது தனக்கென மாகாண சபையினால் வழங்கி வைக்கப்பட்ட காலை, மதிய மற்றும் மாலை நேர உணவுகளுக்காக தனக்கென மாகாண சபையினால் செலவு செய்யப்பட்ட தொகை அடங்கலாக 67,428.40 ரூபாய்க்கான காசோலை, மற்றும் தனது அலுவலக நடவடிக்கைகளுக்கென கிழக்கு மாகாண சபையினால் வழங்கி வைக்கப்பட்ட கடித தலைப்பு காகிதாதிகள்(Letterhead), பைல் அட்டைகள்(File), கடித உரைகள், காகிதங்கள் உள்ளிட்ட எஞ்சிய அனைத்து அலுவலக பொருட்களையும் கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளர் எம்.சீ.எம். செரீப் அவர்களின் முன்னிலையில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் கௌரவ சந்திரதாச கலப்பத்தி அவர்களிடம் கையளித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக பதவியேற்றது முதல் தனக்கென வழங்கி வைக்கப்பட்ட சம்பளத்தில் தனது தனிப்பட்ட தேவைகளுக்காக ஒரு ரூபாவினைக்கூட செலவு செய்யாத நிலையில் அத்தொகையினை மக்களுக்காக வழங்கியிருந்ததோடு தனது தனிப்பட்ட நிதியிலிருந்தும் அதிகளவான தொகையினை மக்கள் பணிக்காகவும் செலவு செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் தனக்கென வழங்கப்பட்ட கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் கையளித்துள்ள மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்கள் அரசியலுக்கான சிறந்ததொரு முன்மாதிரியினை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -