மைத்திரிக்கும் ரணிலிக்கும் பெருந்தேசியத்துக்கும் அடிபணிந்து முஸ்லிம் சமூகத்தை பலி கொடுத்திருக்கும் முஸ்லிம் தலைமைகளா? நமக்கு பாதிப்பென்றால் உயிர் துறப்பவர்கள் என்பதை நமது மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என நாபிர் பௌண்டேசன் தலைவரும், அரசியல் செயற்பாட்டாளருமான பொறியியலாளர் யூ.கே. நாபீர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேற்று (20.09.2017) நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட மாகாண சபைகள் திருத்தம் தொடர்பில் ஆதரித்து வாக்களித்த முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் குறித்து விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவ்வறிக்கையில் காணப்படுவதாவது:-
வெளிக்களத்திலும், நாடாளுமன்றத்திலும் உரையாற்றுகின்றபோது நமது முஸ்லிம் கட்சி தலைவர்கள் முஸ்லிம்சமூகத்திற்கு பாதிப்பு வருமானால் உயிரை கொடுத்தேனும் பாதுகாப்போமென சூளுரைக்கத் தவறுவதில்லை. அதேநேரம் முஸ்லிம்களுக்குப் பாதகமான ஒரு விடயத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்தால் தமதுஅமைச்சுப்பதவிகள் துறக்க நேரிடுமே என்ற பயத்தின் காரணமாக பேசாமடைந்தகளாக வாக்களித்து முஸ்லிம்சமூகத்தை காவுகொடுக்கும் இவர்களெல்லாம் பதவியை துறக்க தயாரில்லாத நிலையில் நமது மக்களுக்காக உயிர்துறப்போம் என்று கூறுவது ஏமாற்று வேலையில்லையா?
பதவிகள் என்பது நமது சாமர்த்தியத்தினால் கிடைக்கின்ற ஒன்றல்ல . அது அல்லாஹ்வின் அருளால் கிட்டுகின்றஒன்றாகும். அது ஒரு அமானிதமாகும். அந்த அமானிதத்துக்கு மோசடி செய்பவர்கள் ஒருபோதும் அல்லாஹ்விடம்வெற்றியடைய முடியாது.
சமூகத்தை விற்று அரசியல் செய்யும் நமது தலைவர்கள் நமது மக்களை மட்டுமல்ல அல்லாஹ்வையும்ஏமாற்றுகின்றோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். தங்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கிய தலைவர்கள்மீதான விசுவாசத்தை முன்னிறுத்தி நாம் பதவியை அடைந்துகொள்வதற்காக எம்மை வாக்களித்து பிரதிநிதிகளாகஆக்கிய மக்களுக்கு விசுவாசம் அற்று நடப்பதென்பது ஓர் போலித்தனமான அரசியல் நிகழ்வாகும்.
உண்மையில் வாக்களிப்பின் போது முஸ்லிம் கட்சிகள் சார்ந்த உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறியிருந்தாலும் ஆகக்குறைந்தது தமது கட்சிகளின் உறுப்பினர்களை ஆதரவாக வாக்களிக்கவிட்டுவிட்டு தலைமைத்துவங்களாவது வெளியேறிச் சென்றிருக்க வேண்டும். அதனைக் கூட செய்யாதுமைத்திரிக்கும் ரணிலிக்கும் பெருந்தேசியத்துக்கும் அடிபணிந்து முஸ்லிம் சமூகத்தை பலி கொடுத்திருக்கும் இவர்களாநமக்கு பாதிப்பென்றால் உயிர் துறப்பவர்கள் என்பதை நமது மக்கள் உணர்ந்திருக்க வேண்டும்.