எம்.வை.அமீர் -
சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல், ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த “மருதம் கலைக்கூடலின் கலையும் களியாட்ட நிகழ்வுகளும்” என்ற தலைப்பில் சிறுவர்களின் கலை ஆற்றலை பறைசாற்றும் கலைநிகழ்வு, மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலான தலைமையில் 2017-09-03 ஆம் திகதி கமு/அல் ஜலால் வித்தியாலய கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.
பார்வையாளர்களால் நிறைந்திருந்த குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீமும் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபாவும் சிறப்பு அதிதியாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முபாறக் முகைதீன் உள்ளிட்ட அதிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
சுமார் 40 நாட்கள் இளம் கலைஞர்களை சிறந்த முறையில் தயார்படுத்தியிருந்த மன்றத்தின் செயலாளர் பாத்திமா சஜ்னாஸ் நிகழ்வுகளையும் தொகுத்துவழங்கினார்.
நிகழ்வுக்கு, நிகழ்வு வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த குறித்த நிகழ்வு, பார்வையாளர்களின் ஆவலைத்தூண்டும் வகையில் அமைந்திருந்ததுடன் நிகழ்வில் மன்றத்தின் தலைவர் இருவேறு அபிநய பாடல்களையும் பார்வையாளர்களுக்கு விருந்தாய் வழங்கி பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.