அதுமட்டுமல்ல நான் அதற்குறிய அமைச்சராக இருந்ததனால் சில வரையரைகளுக்குள்தான் என்னால் செயல்பட முடிந்தது என்றும், ஆனால் முஸ்லிங்களின் நலன் விடயத்தில் கரிசனை காட்டவேண்டியவர்கள் இந்தவிடயத்தில் அலட்சியமாக இருந்துவிட்டு இப்போது குறைகூறுவது ஏற்புடையதல்ல என்றும் கூறியுள்ளீர்கள்.
இந்த வார்த்தைகளை அவர்களை மிரட்டுவதற்காக நீங்கள் பயன்படுத்தியிருந்தாலும், இது முஸ்லிம் சமூகம் அவர்களின் மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கு பாரிய அடியாக கருதவேண்டிய விடயமாகும்.
இதனை மக்கள் மன்றத்துக்கு சொல்லவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லாதுவிட்டாலும், இதன் உண்மைத்தண்மையை அறியவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது, இந்த விடயம் எங்களினதும் எங்களின் எதிர்கால சந்ததிகளினதும் வாழ்வாதார பிரச்சினையாகும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
சமூகத்துக்காக உயிரையும் கொடுப்போம் என்று மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுச்சென்ற இவர்கள் பதவிக்கும் பட்டத்துக்கும் அடிமையானது மட்டுமல்ல, முஸ்லிம்களுடை அன்றாட பிரச்சினைகளை இனம்கண்டு அதற்கு தீர்வுதேடுவதற்கு நேரமில்லாமல் இருப்பதுடன், அவர்கள் பெற்றுள்ள அமைச்சி விடயத்தை பார்ப்பதிலும், சுகபோகமாக வாழ்வதற்கும் நேரத்தை பயன்படுத்துவதில்தான் அவர்களின் காலமும் நேரமும் செலவு செய்யப்படுகின்றது என்பதுதான் உங்கள் கூற்றின் மூலம் நாங்கள் அறியக்கூடியதாகவும் உள்ளது.
ஆகவே முஸ்லிம் சமூகத்தின் பாதுகாவலர்கள் நாங்கள்தான் என்று கூறுகின்ற இந்த முஸ்லிம் தலைவர்கள் முக்கியமான இந்த சட்டதிருத்த விடயத்தில் கவலையீனமாக நடந்திருப்பதாக நீங்கள் கூறியிருப்பது மிகவும் பாரதூரமான விடயமாகும். ஆகவே இதன் உண்மைத் தண்மையை கட்டாயம் நீங்கள் வெளியிடவேண்டும், அப்படி நீங்கள் வெளியிடாது விட்டால் உங்களின் கூற்று பொய்யானது என்ற கருத்தை கொடுத்துவிடுவது மட்டுமல்ல, எங்களின் உயிரிலும் மேலான எங்கள் தலைவர்களின் மேல் வீண்பழி சுமத்தியதாகத்தான் நாங்கள் கருதவேண்டியும் வரும்.
ஆகவே, அல்லாஹுவுக்காக இதன் உண்மைத்தண்மையை நீங்கள் வெளிப்படுத்தியே ஆகவேண்டும். அதன் பிறகு அதில் உண்மைத் தண்மை இருந்தால் எங்கள் தலைவர்களை எங்கள் மக்கள் யார் என்று அறிந்து கொண்டு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதே எங்களின் வேண்டுகோளாகும்.