பொத்துவிலுக்கு மாகாண சபை அதிகாரம் வழங்க வேண்டும் - அமைச்சர் நஸீர்

கிழக்கு மாகாணத்தில் தூர பிரதேசமாக காணப்படும் பொத்துவில் பிரதேசத்தில் ஒரு மாகாண சபை அதிகாரம் கிடைக்க அடுத்த முறை இம்மக்கள் முயற்சி செய்ய வேண்டும் எனவும் அதற்காக நான் ஒத்துழைப்புக்களையு வழங்கவுள்ளேன் எனவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் மற்றும் கோமாரி பிரதேங்களில் அமைகப்பட்ட ஆயுள்வேத மத்திய மருந்தகங்களை நேற்று (31.08.2017) திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டாவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; 

பொத்துவில் பிரதேசத்தின் முழுமையான அபிவிருத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே முதன்மை இடத்தில் உள்ளத்து தவிர வேறு எவறு இப்பிரதேசத்தின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை நான் பொறுப்பேற்று இன்று சிறந்து முறையில் இன, பிரதேச பாகுபாடு இன்றி மேற்கொள்ளும் சேவைக்கும் பொத்துவில் மக்களின் பங்களிப்பும் உள்ளது. இப்பிரதேசத்தின் பல அவிருத்திகள் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் நிவர்த்தி செய்யப்பட்டு வந்தாலும் இன்னும் பல அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டிய கடமையில் நாம் உள்ளோம். இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகரத்திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். மிக விரைவில் பல அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

குறிப்பாக இப்பிரதேச மக்களுக்கு என்று ஓர் அதிகாரம் நிலை நாட்டப்படும் போது முற்றுமுழுதாக அவர்களின் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது ஆகவே இதற்கு நான் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளேன். அதற்காக மக்களாகிய நீங்கள் ஒற்றுமையுடன் சிறந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். அது போல் இங்குள்ள அரசியல் வாதிகள் ஒன்றினைத்து மக்களுக்காக குரல்கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -