ஆரம்பகாலத்தில் பெண்கள் வீட்டு வேளைகளுக்கு அதிகமாகச் சென்றபோது,படித்த இளைஞர்கள் ஊருக்குள்ளே வேளைவாய்ப்புகளை இயலுமானவரை பெறக்கூடியதாக இருந்தது.குறிப்பாக எமது ஊரில் மத்தியகிழக்கிற்கு படித்தவர்கள் செல்வது குறைவாகவே இருந்தது.அதிலும் பல்கலைக்கழகம் மற்றும் தொழிநுட்ப கல்லூரி முடித்தவர்கள் மத்தியகிழக்கைவிட வேறு நாடுகளுக்கே சென்றனர்.
முக்கியமாக 2000ம் ஆண்டு வரை அஷ்ரபினால் வழங்கப்பட்ட பலநியமனங்கள் மற்றும் 2004ம் ஆண்டுவரை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அதிகளவிலான நியமனங்களால் மத்தியகிழக்கிற்கு ஆண்கள் போவதில் ஆர்வம்காட்டப்படாமலே இருந்தது.
இருந்தபோதும் மத்தியகிழக்கில் பணிப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் அதிகரிப்பு மற்றும் இஸ்லாமிய பிரச்சாரங்களின் உந்துதல்களால் முஸ்லீம் பெண்கள் மத்தியகிழக்கிற்கு போகும் விகிதம் பாரிய வீழ்ச்சிகண்டது.
இருந்தபோதும் 2008ம் ஆண்டுக்குப் பின்னர் படித்த,பட்டதாரி மற்றும் சாதாரண ஆண்கள் நமது ஊரில் இருந்து மத்தியகிழக்கிற்கு போவதில் பாரிய ஆர்வம் காட்டத் தொடங்கினர்.இந்த ஆர்வத்தின் உச்சநிலை
1-அரச தொழிலை தற்காலிக ஓய்வு பெற்றும்
2-பல்கலைக்கழகம் முடித்ததும்
3-தொழில்சார் கற்கை நெறிகளை கொழும்பிற்குச் சென்று முடிப்பதும்...என துபாய் மற்றும் கட்டார் நாட்டுக்கு எமது ஊரில் இருந்து அதிகமான இளைஞர்களை வெளியேறத் தொடங்கினர்.
இவ்வாறு கடந்த சுமார் 10 வருடங்களாக லட்சக்கணக்கான இளைஞர்களது வெளியேற்றம் மத்தியகிழக்கை நோக்கி படையெடுத்தது.இதற்கு பல்வேறு அகப்புறக் காரணங்கள் ஏதுவாக அமைந்து:
1-அரசாங்கத்தின் பட்டதாரிகளுக்கான வேளைவாய்ப்புகள் தாமதமானது.
2-வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும்,அதனை எதிர்கொள்வதில் குடும்பத் தலைவனான இளைஞனுக்கு சவாலாக மாறியது.
3-அரசாங்கத்தின் வேளைவாய்ப்பு வழங்கும் கொள்கையில் உண்டான வீழ்ச்சி
4-அதிகமான கட்சிகள் உருவானதால் வேளைவாய்ப்பு போட்டியாகவும்,வியாபாரமாகவும் மாறியது.
5-யுத்தத்தின் பின்னர் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் முற்றாக நிறுத்தப்பட்டது
6-வெளிநாட்டுக்குப் போவதன் மூலமே உழைக்கலாம் என்றமனநிலை இளைஞர்களிடம் ஆதிக்கமானது
7-குடும்ப அமைப்பு மற்றும் கலாச்சார கட்டமைப்புக்குள் இருந்து நாகரீக மாற்றத்தால் இளைஞர்கள் சுயமாக செயற்பட முனைவது
போன்ற பல்வேறு காரணங்களால் நமது பிரதேசத்து இளைஞர்களின் ஆளுமை,திறமை,பங்குபற்றல், உழைப்பு மற்றும் அறிவு என்பவற்றை நமது மண் இழந்து நிற்கின்றது.நமது பிரதேசமும்,தலமைகளும் இவர்களை சரியாக பயன்படுத்தி இருந்தால் பிரதேச அபிவிருத்தியும்,சமூகத்தின் எழிர்ச்சியும் பல்வேறு கட்டங்களைத் தாண்டி இருக்கும்.
இவர்கள் எமது பிரதேசத்தின் முத்தான சொத்துக்கள்.இன்று இவர்களின் இடைவெளியால் பலதலமுறைக்குமான முன்னேற்றத்தில் பின்நோக்கி நிற்கின்றோம்.இந்த இளைஞர்களின் வெளியேற்றம் ஏனைய பிரதேசங்களைவிட நமது பிரதேசத்தில் அதிகமான தாக்கங்களை உருவாக்கியுள்ளது.குறிப்பாக
1-சமூகத்தை காட்டிக் கொடுத்து வயிறு நிறைக்கும் கூட்டம் அதிகரித்துள்ளது.
2-சகலரும் சண்டியராகவும் தலைவர்களாகவும் மாறியுள்ளனர்
3-சமூக கட்டுக்கோப்பு சீர்குழைந்துவிட்டது
4-தகுதியற்றவர்கள் பலர் உயர்பதவிகளில் உள்ளனர்
5-தகுதி,அனுபவம் பாராமல் எந்த வேளைவாய்ப்பும் எவருக்கும் வழங்கும் நிலை உருவாகியுள்ளது.இதனால் சகல நிர்வாக நிறுவனங்களும் சீரழிந்துள்ளது.
தேர்தலுக்காக ஊருக்கு வருவதும்,அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்படுவதுமாக ஒருபுறமும்..ஏதோ சொந்தமான தொழிலைச் செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் ஊருக்கு வந்து முடியாது போவதுமாக மறுபுறமும் இரண்டு மாதங்களுக்கு மேலாக இளைஞனை நிற்கவிடாமல் ஊர் விரட்டிவிடுகிறது.இது உண்மையில் துர்ப்பாக்கிய நிலையாகும்.
இந்த சூழ்நிலையில் நமது இளைஞர்களை முற்றாக ஊருக்கு திருப்பி அழைப்பதோ,அவர்களுக்கான தொழில் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவதோ சாத்தியமில்லாத ஒன்றாகும்.ஆனால் இவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் ஊருக்கு வந்தாலும் எமது பிரதேசத்திற்கு பயனுள்ளவர்களாக்கலாம்.
விஷேடமாக இன்று எமது பிரதேசத்தின் மாற்றம்,முன்னேற்றம்,அரசியல் மற்றும் நன்கொடை விடயங்களில் முகநூலினூடாக அதிகமான இளைஞர்கள் தியாக மனப்பங்குடன் எதிர்பார்ப்புகள் இன்றி செயற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
தான்மட்டுமே சகலவற்றையும் அனுபவிக்க வேண்டுமென்ற மனநிலையில் ஊருக்குள் பலர் சுயநலமாகிவிட்டனர்.இருந்தும் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து,பலமணிநேர வேளைப்பழுவிற்குள்,ஊரிலுள்ள குடும்பத்துடனும் உறவாடி ,கிடைக்கின்ற சிறிய ஓய்வில் !!ஒருவரியாவது ஊரைப்பற்றி எழுதும் மத்தியகிழக்கு இளைஞனே எமது உண்மையான சொத்து.இவர்களுக்கு நாம் எப்போதும் முன்னுரிமை வழங்க வேண்டும்(Big Salute).
ஆகவை மத்தியகிழக்கில் இருக்கும் எமது உடன்பிறப்புகளை முகநூலினூடாக மட்டுமல்ல செயற்பாட்டிலும் எமது பிரதேசத்தின் சகலவிடயங்களிலும் பங்காளர்களாக மாற்றவேண்டும்.
இவர்களால் உறவினர்களுக்கு அனுப்பப்படுகின்ற பணத்தின் மூலம் எமது பிரதேசத்தின் 52%கு அதிகமான வருமானம் சமப்படுத்தப்படுகிறது.கடல்தொழில்,விவசாயம் காலநிலை மற்றும் இதர காரணங்களால் நிச்சயமற்றதாகவே உள்ளது.அரசதொழில்களைத் தவிர மத்தியகிழக்கில் இருந்து வருகின்ற பணத்திலே பிரதேசத்தின் நாளாந்த வாழ்க்கை சுழல்கிறது.
அந்தவகையில் மத்தியகிழக்கு இளைஞர்கள் வெளிநாட்டில் இருக்கும் போது முதலீட்டில் பங்காளராகவும்!
ஊருக்கு வந்ததும் வியாபாரம்/தொழில்துறைக்கு சொந்தக்காரராகவும் மாற்றும் பொருளாதார சீரமைப்பு நமது பிரதேசத்திற்கு அவசியமாகும்.
விஷேசமாக வறுமை,குடும்பத்தலமை மற்றும் ஒருசில ஆணாதிக்க செயற்பாடுகளால் இன்னும் பலசகோதரிகள் மத்தியகிழக்கில் தொழில்புரிகின்றனர்.மார்க்க ரீதியான நிபந்தனைகளையும் மீறி இவர்கள் சூழ்நிலைகளால் தள்ளப்பட்டுள்ளனர்.இவர்களுடைய எதிர்பார்ப்புகளும்,வேதனைகளும் சரியான முறையால் சமூகத்தால் புரிந்து கொள்ளப்படுவதில்லை.ஒப்பீட்டளவில் ஆண்களைவிட இவர்களின் அர்ப்பணிப்பும்,சகிப்புத் தன்மையும் நிச்சயம் மதிப்பளிக்கப்பட வேண்டும்.சமூகத்தில் குறிப்பாக ஆண்களிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்புகள் மூலம் பெண்களது வெளியேற்றத்தை இயலுமானவரை குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம்.
இதற்காக "my Partner tomorrow owner" என்ற தலைப்புடன் எனது நோக்கிற்கான ஆய்வு நிறைவடையும் நிலையில் உள்ளது.அதாவது தற்காலிகமாக மத்தியகிழக்கில் உழைப்புடன் இருக்கும் இளைஞனுக்கு நிரந்தர வசிப்பிடம் நமது ஊரே.ஊருக்கு வந்தபின்னர் ஓரிரு மாதங்களில் அவனுக்கு வாழ்க்கை மீது வெறுப்பு உண்டாகிறது.இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
எனது இந்த நீண்ட ஆய்வின் நோக்கம் மதத்தியகிழக்கில் வேளைபார்க்கும் இருக்கும் ஒவ்வொரு இளைஞனது உழைப்பும் நமது பிரதேசத்தில் முதலீடுகளாக்கப்பட வேண்டும்.நிரந்தரமாக எமது பிரதேசத்திற்கு வருகின்ற போது ஒரு முதலீட்டுப் பங்காளியாகவோ,சொந்தக்காரனாகவோ மாறவேண்டும்.
அத்துடன் மத்தியகிழக்கில் அவன் கற்றுக்கொண்ட திறமைகள்,ஆளுமகள் மற்றும் அனுபவங்கள் நமது பிரதேசத்திற்கு தொடர்ந்து கிடைக்கவேண்டும்.அதன்மூலம் பல இளைஞர்கள் நன்மைபெற வேண்டும்.
அத்துடன் சமூக மற்றும் அரசியல்ரீதியிலும் பொறுப்புவாயந்த பங்களிப்பைச் செய்யவேண்டும்.முகநூலினூடாக வெளிப்படுத்துகின்ற உணர்வுகளுக்கு செயல்வடிவம் கொடுக்க உள்ளூராட்சி மன்றங்களில் இவர்களுக்கான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும்.
ஆகவே ஏதோ தவிர்க்கமுடியாத காரணங்களால் மத்தியகிழக்கில் வாழ்கின்ற நமது உறவுகளை பிரதேசத்தில் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பை மீளமைக்கும் பணியில் பங்காளர்களாக்குவோம்.