புனித ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தை கொண்டாடும் முகமாகவும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து நட்புறவை வளர்த்துக்கொள்ளும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று கூடல் மிகவும் வரவேற்கத்தக்கது.
ஆனாலும் திருகோணமலையில் தாங்கள் தான் ஊடகத்தை வளர்த்தவர்கள் என நினைத்துக்கொண்டு புதிதாக வளர்ந்து வரும் ஊடகவியலாளர்களை விரும்பாத மாமேதைகளின் கீழ் தரமான செயலினால் ஊடகவியலாளராக இருந்தாலும் எந்த அமைப்பும் தேவையில்லையென நினைத்துக்கொண்டு செல்லாமைக்கு மனவருந்துகின்றேன்.
ஊடக அமைப்புக்களில் பதவிகளை பெற்றுக்கொண்டு திருகோணமலையில் ஆரம்ப கால ஊடகவியலாளர்கள் என கூறிக்கொண்டு தாங்கள் சொன்னால் மட்டும் தான் செயலகத்திற்கு செல்ல முடியும் என சொல்லிச்சொல்லி ஊடகத்தையே வெறுப்பாக்கி விட்டார்கள்.
எனவே ஊடக அமைப்புக்கள்-அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடக செயலமர்வுகளை நடாத்தும் போது ஊடக நிறுவனங்கள் ஊடாக பெயர் விபரங்களை பெற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.