முபாறக் அப்துல் மஜீத் உலமா கட்சி-
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
வடக்கையும் கிழக்கையும் இணைக்க முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உலமா கட்சி எதிர்க்கிறது. ஏற்கனவே கிழக்கு வடக்குடன் இணைந்திருந்த போது கிழக்கு முஸ்லிம்களும் கிழக்கு சிங்கள மக்களும் அடிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே வாழ்ந்தனர். இந்த நிலையில் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் முயற்சியை அரசு கள்ளத்தனமாக மேற்கொள்வதன் முயற்சியே திடீரென பாராளுமன்றத்தில் இதன் நகலை முன் வைத்தமையாகும். நகலில் என்ன உள்ளது என்று கூட வாசித்து முடிக்காமல் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக உருவான, கிழக்கு முஸ்லிம்களின் அதிக வாக்குகளைப்பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் இதற்கு ஆதரவளித்தமை கிழக்கு முஸ்லிம்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும்.
இப்படியான நிலையில் தேசிய அளவில் முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றிக்கொள்வதற்காக சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக சிங்கள முஸ்லிம் துவேசப்பேச்சுக்கள் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இதற்காக ஐ தே க அரசு தனது இனவாதிகளை இறக்கிவிடுவர்.
ஏற்கனவே இவ்வாறான திசை திருப்பத்தில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் இருக்கின்ற போதே புதிய அரசியல் யாப்பு நகல் எழுதப்பட்டுள்ளது.
இப்போது இதனை முஸ்லிம்களும் சில சிங்களவர்களும் எதிர்ப்பார்கள் என்பது அரசுக்கு தெரியும். அதனை கட்டுப்படுத்தி முஸ்லிம்களினதும் சிங்கள மக்களினதும் கவனத்தை திருப்ப முஸ்லிம் சிங்கள இனவாதம் முன்னெடுக்கப்படும். இதற்காக டயஸ்போராவினால் வாங்கப்பட்டுள்ள ஞானசார, சுமண தேரர் உட்பட டான் பிரசாத், சம்பிக்க போன்றோர் களமிறக்கப்படும் சாத்தியக்கூறு உள்ளது.
ஆகவே முஸ்லிம்கள் மிக கவனமாக இருப்பதுடன் கொழும்பை மையமாகக்கொண்ட முஸ்லிம் அமைப்புக்கள் சிங்கள புத்திஜீவிகளையும் அழைத்து சிங்கள மொழியில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.