உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக 'நில செவன ' கிராம அலுவலர்களுக்கான பணிமனை அமைக்கும் வேலைத்திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 14 பணிமனைகளை அமைப்பதற்கு சிபாரிசிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் , பிரதியமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரகள் ஆகியோரிடத்தில் ஒவ்வொருவரிடமிருந்தும் மூன்று நில செவன நிலையத்துக்கான சிபாரிசுக்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கேற்ப நுவரெலியா பிரதேச செயலகப்பிரிவில் லிந்துலை ஹில்டன்ஹோல் , அக்கரப்பத்தனை எல்பெத்த , பீட்று , டயகம ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும்
கொத்மலை பிரதேச செயலகப்பிரிவில் குயின்ஸ்பெரி , புரடொப் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலும் , அம்பகமுவ பிரதேச செயலகப்பரிவில் லொயினோன் , கலவல்தெனிய , மஸ்கெலிய , ஹிட்டிகேகம , இன்ஞெஸ்ட்ரி , ெகர்க்கஸ்வோல்ட் , ஓல்டன் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும் வலபனே பிரதேச செயலகப்பிரிவில் சான்த மாக்கிரட் கிராம சேவகர் பிரிவிலும் நில செவன கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளன.நில செவன கட்டிட நிர்மாணத்துக்குத் தலா 15 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளது.
அமைச்சர் திகாம்பரம் லிந்துலை ஹில்டன்ஹோல் , அக்கரப்பத்தனை ஹெல்பெத்த ,பொகவந்தலாவை லொயினோன் ஆகிய நில செவன கட்டிடங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் நுவரெலியா பீட்றூ , கொத்மலை குயின்ஸ்பெரி , பொகவந்தலாவை கேர்க்கஸ்வோல்ட் ஆகிய நில செவன கட்டிடங்களுக்கான சிபாரிசுகளை வழங்கியுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.