பொத்துவில் பிரதேசம் தொடர்ந்தும் புறக்கனிப்பு - தவிசாளர் வாசித்

பைஷல் இஸ்மாயில் -

ம்பாறை, பொத்துவிலுக்கான மாகாண சபை வேட்பாளர் வழங்கப்படுவதோடு மாத்திரமல்லாமல் குறித்த வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய அனைத்து ஊர்மக்களும் உதவ முன்வரவேண்டும். என்று பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.வாசித் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தவர்கள் மஹிந்தவை கொண்டு வரவேண்டும் என்று பாரிய முயற்சிளைச் செய்து தோல்வியடைந்தவர்கள் இன்று இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அரசியல் அதிகாரங்களைப்பெற்று பல அபிவிருத்திப் பணிகளை செய்து வருகின்றார்கள். இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வரவேண்டும் என்று பல போராட்டங்களை நடாத்தியவர்கள் நாங்கள். அதன் மூலம் பாரிய வெற்றியையும் கண்ட எமக்கு, இந்த அரசில் ஒரு அரசியல் அதிகாரம் கூட பொத்துவில் பிரதேசத்துக்கு கிடைக்கவில்லை என்று நினைக்கும்போது மனக்கவலையாகவுள்ளது.

சுமார் 30 ஆயிரம் வாக்குகளைக் கொண்ட இந்த பொத்துவில் பிரதேசத்தில் வேறும் 1500 வாக்குகளை மட்டும் வைத்திரிப்பவர்களுக்கு கடந்த ஆட்சியிலும் அதிகாரம், இந்த நல்லாட்சி அரசிலும் அதிகாரம். இது எந்த விதத்தில் நியாயமாகும்.

இவ்வாறு பொத்துவில் பிரதேசத்துக்கான ஒருங்கினைப்பு குழுவின் இணைத் தலைவர் அதிகாரத்தை பெற்று வந்தவர்கள் தங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திப் பணிகளை தாராளமாகச் செய்துகொண்டு போகலாம். அதற்கு மு.காவும் தடையில்லை, பொத்துவில் பிரதேச மக்களும் தடையில்லை. இந்த அபிவிருத்தி வேலைகளை யார் செய்தாலும் அது பொத்துவில் பிரதேசத்துக்ச் செய்யப்படுகின்ற அபிவிருத்திகளேயாகும்.

இது அவ்வாறில்லாமல் நாங்கள் முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி வேலைகளுக்கு பிரதேச ஒருங்கினைப்பு குழுக் கூட்டத்தில்இவர்கள் தடைகள் விதிக்கின்றனர். இது எதனால் ஏற்படுகின்றது? எங்களிடம் ஒரு அதிகாரம் ஒன்று இல்லை என்பதனாலேயே ஆகும். இதனால்தான் நாங்கள் பொத்துவில் பிரதேசத்து ஒரு அதிகாரத்தை வழங்குங்கள் என்று கேட்கின்றோம்.

தற்போது எல்லா பிரதேசங்களுக்கும் வாகன வசதிகளுடன் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏன் இதுவரை காலமும் அதிகாரம் ஒன்று வழங்கப்படவில்லை? தொடர்ச்சியாக ஏன் புறக்கனிக்கப்பட்டு வருகின்றது? இப்பிரதேசத்தின் தலை விதி இதுதானா? என்று எனக்கு விளங்கவி்லலை.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலும் பொத்துவில் பிரதேசம் புறக்கனிக்கப்பட்டது.

 இந்த நல்லாட்சி அரசிலும் புறக்கனிக்கப்பட்டுள்ளது. இப் புறக்கனிப்பு தொடர்ந்தும் இடம்பெறாமல் இம்முறை மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வழங்கவேண்டும் அவ்வாறு வழங்கப்படுகின நபருக்கு சகல பிரதேச மக்களும் ஆதரவு வழங்கப்பட்ட வேண்டுன் என்பதே இப்பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும். என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -