க.கிஷாந்தன்-
மலையகத்தில் சீரற்ற காலநிலையினால் அட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும், அட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் பனிமூட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றது. இதேவேளை அதிகமான பனி மூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் நிரம்பியுள்ள பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் என்பதோடு, சாரதிகள் வாகனங்களில் மின்விளக்குகளை (ஹெட்லைட்) எறியவிட்டு வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அத்தோடு மழை பெய்து வருவதனால் வீதி வழுக்கல் தன்மை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.