ஏ.எஸ்.எம்.ஜாவித்-
நீர்வழங்கள் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சினால் கொழும்பு நகரில் பாரிய குடிநீர்க் குழாய்கள் பொருத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக தற்போது இப்பாவத்தை சந்திக்கும் ஹெட்டியாவத்தை சந்திக்கும் இடையிலான பகுதியிலேயே பாரிய நீர்க் குழாய் பொருத்தும் வேலைத்திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
கொழும்பு சுங்கப்பகுதிக்கு அருகாமையால் செல்லும் ஸ்ரீமத் இராமநாதன் மாவத்தையில் இப்பாவத்தை சந்தியிலிருந்து ஹெட்டியாவத்தை சந்தி வரையுமான பகுதியிலேயே இந்த பாரிய நீர்க்குழாய்கள் திருத்தும் பணிகளை அமைச்சு செய்ரா நிறுவனத்தினூடாக மேற் கொண்டு வருகின்றது.
மூன்று நாட்களில் முடிக்கும் வகையில் இவ்வேளைகள் எதிர்வரும் திங்கற்கிழமை (25) காலை 6.00 மணிவரை இடம் பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வேளைகளை செய்ரா நிறுவனத்தினூடாக அமைச்சு மேற்கொண்டு வருவதால் குறித்த பாதையூடாக பயனங்களை மேற்கொள்ளும் மக்கள் மற்றும் வாகனச் சாரதிகள் குறித்த காலப் பகுதிவரை மாற்றுப் பாதைகளைப் பயன்பபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.