பாரிய ரயில் விபத்து ரயில் கடவை ஊழியரின் செயலால் தவிர்ப்பு..!

மு.இராமச்சந்திரன்-
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் அட்டன் பகுதியில் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று ரயில் பாதை ஊழியர் ஒருவரின் விரைந்து செயற்பட்டமையினால் தவிர்க்கப்பட்டுள்ளதுடன் பதுளை ரயில் சேவை 1 மணித்தியாலத்தின் பின் மீண்டும் சேவையை ஆரம்பித்ததாக அட்டன் ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

அட்டன் சிங்கமலை சுரங்க பதைக்குள் ரயில் தண்டவளத்தில் கணப்பட்ட வெடிப்பை கண்டு அட்டன் ரயில் நிலையத்திற்கு தொடர்பை உடனடியாக ஏற்படுத்த முடியாத நிலையில் விரைந்து செயற்பட்ட குறித்த ஊழியர் சிங்க மலை சுரங்கத்தினுள்ளிருந்து ஒடி வந்து எதிரே அட்டன் ரயில் நிலையத்திலிருந்து பதுளை நோக்கி பயணத்தை மீண்டும் ஆரம்பித்த ரயிலை சிவப்பு சமிஞ்சை காட்டி நிறுத்தியுள்ளார் 

காலிங்க பண்டார எனும் குறித்த ஊழியரின் சிறப்பான செயற்பாட்டினால் சிங்கமலை சுரங்கத்தினுள் இடம்பெறவிருந்த பாரிய அணர்த்தமொன்றும் தவிர்க்கப்பட்டுள்ளது. அட்டன் ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயில் 04.09.2017 மதியம் 1.45 மணியளவிலே மீண்டும் பதுளை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

உடைந்து காணப்பட்ட ரயில் தண்டவாளப்பகுதி அட்டன் ரயில் நிலைய ஊழியர்களினால் திருத்தியமைத்தப்பின் பதுளைக்கான ரயில் சேவை சுமார் 1 மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகியது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -